- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலி தன்னை ஃபார்மில் வெச்சுக்க.. ஸ்ரேயாஸ் வழியை ஃபாலோ பண்ணனும்.. ஃகைப் அட்வைஸ்

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முதல் தொடரிலேயே பரிதாபமாக தோற்றது. அந்த தோல்விக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தமது கேரியரிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட்டானது முக்கிய காரணமானது.

கடைசியாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடிய ரோஹித் சர்மா, விராட் கோலி டி20, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டனர். அதனால் 7 மாதங்கள் கழித்து இத்தொடரில் களமிறங்கிய அவர்கள் இத்தொடரின் முதல் போட்டியில் 8, 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். 2வது போட்டியில் ரோஹித் சர்மா 73 ரன்கள் குவித்து விட்டு ஃபார்மை கண்டறிந்தார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் போல:

இருப்பினும் விராட் கோலி அடுத்தடுத்து டக் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதனால் 2027 உலகக் கோப்பைக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள அவர் 3வது போட்டியில் பெரிய ரன்கள் குவிப்பது அவசியமாகிறது. இந்நிலையில் விராட் கோலியை போல ஸ்ரேயாஸ் ஐயரும் இந்தியாவுக்காக சமீப காலங்களாக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடவில்லை.

ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அவர் சதத்தை அடித்தார். அந்த வகையில் தம்மை ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல ஃபார்மில் வைத்துக் கொள்வதாக முன்னாள் வீரர் முகமது ஃகைப் தெரிவித்துள்ளார். எனவே விராட் கோலி தம்மை ஃபார்மில் வைத்துக்கொள்ள அதே வழியை பின்பற்ற வேண்டும் என்று ஃகைப் அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

கைப் அட்வைஸ்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சமீபத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை சந்தித்த போது அவருடைய ஸ்டேன்ஸ் மற்றும் ரிதத்தை கேட்டறிந்தேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்காலிக இடைவெளி எடுத்துள்ள அவர் டி20 கிரிக்கெட்டிலும் அதிகம் விளையாடுவதில்லை. ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடும் அவரால் சரளமாக விளையாட முடிகிறது? என்பதை நான் புரிந்துகொள்ள விரும்பினேன்”

இதையும் படிங்க: 3வது ஒன்டே நடைபெறும் சிட்னி மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“மனதளவில் ஒருமுகப்படுத்தப்பட்ட அவர் தன்னுடைய ஆட்டம் இன்சைட் அவுட் என்பதை அறிந்துள்ளார். அதற்காக தன்னுடைய மனதை இசைத்து வைத்துள்ள அவர் இந்தியா ஏ அணிக்காக விளையாடினார். அதனாலேயே அதே பாதையை விராட், ரோஹித் பின்பற்றி வேண்டுமென்று நான் சொல்கிறேன். ஸ்ரேயாஸின் சரளமான ஆட்டம் அவர் செயலில் இருப்பதால் வருகிறது. அவர் எப்போதும் தற்போதைய விராட் போல தொடர்பில் இல்லாதது போல் விளையாடியதில்லை. விராட் தற்சமயத்தில் அமைதியற்றவராக தெரிகிறார். ஸ்ரேயாஸ் தொடர்ச்சியாக விளையாடுகிறார்” என்று கூறினார்.

- Advertisement -