என் வாழக்கையில் திருப்புமுனையாக அமைந்த டெஸ்ட் தொடர் இதுதான் – கோலியின் நெகிழ்ச்சி பதிவு

- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சர்வதேச அளவில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் நடைபெறாமல் உள்ளது. மேலும் அடுத்து எப்போது இந்த நிலைமை சீராகும் என்று தெரியாத நிலையில் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது வீட்டில் முடங்கி உள்ளனர். கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தற்போதைக்கு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.

ind-2

- Advertisement -

இந்த நேரத்தில் கிடைத்த ஓய்வினை சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்கள் வீரர்கள் தங்கள் அனுபவங்களையும் நேரலையின் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய மைல்கல்லாக அமைந்த போட்டி ஒன்றினை நினைவு படுத்தி உள்ளார்.

2014 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் குறிப்பாக அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக விராத் கோலி இந்திய அணி கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடினார். அந்த போட்டியில் காயம் காரணமாக தோனி வெளியே அமர்ந்ததால் கோலிக்கு கேப்டன் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் அந்த போட்டி குறித்து நினைவுகூர்ந்த கோலி அடிலெய்டு டெஸ்ட் மிகவும் விசேஷமான முக்கியமான டெஸ்ட் போட்டி என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கோலி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தற்போதைய இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டின் பயணத்தில் மிகச் சிறப்பு வாய்ந்த முக்கியமான டெஸ்ட் போட்டியை நினைவு கூறுகிறேன்.

- Advertisement -

2016 ஆம் ஆண்டு அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி மிகவும் உணர்ச்சிகரமான போட்டியாக அமைந்தது. மைதானத்தில் அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கும் அந்த உணர்வு நிச்சயம் இருந்திருக்கும். அந்த டெஸ்ட் போட்டியின் இறுதியில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நிறையக் கற்றுக்கொண்டோம் தனது எனது கோலி பதிவிட்டுள்ளார்.

indvsaus

அதன் பின்னர் மீண்டும் 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement