சைவம் தான் ஆனால் முட்டை சாப்பிடுவேன். விராட் கோலியின் பதிலால் குழம்பிய ரசிகர்கள் – விராட் கோலி கொடுத்த பதில்

Kohli
- Advertisement -

இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளதால் கடந்த 19ஆம் தேதி முதல் 14 நாட்கள் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் குவாரன்டைனில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குவாரண்டினில் வீரர்கள் அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கம் மூலமாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர்.

IND

அந்த வகையில் இந்திய அணியை சேர்ந்த கேப்டன் விராத் கோலி கடந்த 25ஆம் தேதி இந்திய அணியுடன் குவாரன்டைனில் இணைந்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே தனது மகளின் பெயருக்கான அர்த்தம் தனது மகளின் புகைப்படம் போன்றவற்றை குறித்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த கோலி தற்போது அவரின் டயட் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதன்படி அவர் தினசரி வாழ்வில் என்னென்ன உணவுகளை சாப்பிடுகிறார் ? என்ன உணவு முறைகளை கடை பிடிக்கிறார் ? என்பது குறித்தும் அவர் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டு இருந்த கருத்தில் : காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்வதாகவும், அவ்வப்போது முட்டைகளை சாப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி 2 கப் காஃபி, கீரைகள், தோசை வகைகள் போன்றவற்றை சரியான அளவில் சாப்பிட்டு வருவதாகவும் கூறியிருந்தார்.

kohli diet

ஏற்கனவே விராட் கோலி அளித்திருந்த ஒரு பேட்டியில் தான் வெஜிடேரியன் உணவு வகைகளை மட்டுமே உட்கொள்வதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது முட்டையும் அவர் தனது சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதால் கோலி எவ்வாறு சைவ பிரியர் என்று கூறினார் என்கிற வாக்கில் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். இந்நிலையில் அதற்கு கோலி மீண்டும் பதிலளிக்கையில் : நான் சைவத்தை சேர்ந்தவன் என கூறிக் கொள்ள விரும்ப மாட்டேன்.

kohli diet 1

ஆனால் சைவத்தை தான் அதிகமாக பின்பற்றி வருகிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் காய்கறிகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறி அந்தக் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதனால் கோலி சைவ உணவுடன் சேர்த்து முட்டையையும் சாப்பிட்டு வருவது அவரது டயட்டாக உள்ளது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement