பவுண்டரி லைனில் அமர்ந்து வில்லியம்சனுடன் பேசியது இதுதான் – மனம்திறந்த கோலி

Kohli-3
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 5 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆட்ட நாயகனாகவும், துவக்க வீரர் ராகுல் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

Kane

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் ஓய்வின் காரணமாக விளையாடவில்லை. போட்டி நடைபெற்றபோது பவுண்டரி லைனில் இருவரும் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் தாங்கள் என்ன பேசினோம் வில்லியம்சன் குறித்து நான் என்ன நினைக்கிறேன் என்பது பற்றி கோலி வெற்றிக்குப் பிறகு பேசினார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : வில்லியம்சன் மற்றும் நான் எங்கள் இருவரது மனநிலையும் ஒரே மாதிரியாக இருக்கிறது. உலகின் வெவ்வேறு இடங்களில் பிறந்து இது போன்று ஒரே மாதிரி சிந்திப்பது அதிசயமாக இருக்கிறது. நாங்கள் இருவரும் சிந்திப்பது பேசுவது எல்லாம் ஒரே மொழியில் என்பது சிறப்பான விடயம்.

kohli2

நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது சிறப்பான ஒருவரது கையில் உள்ளது. அந்த அணியை வழிநடத்த வில்லியம்சன் மிகத் தகுதியான நபர் என்று நான் நினைக்கிறேன். மேலும் நியூசிலாந்து முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அவர் விளங்குவார். வருங்காலத்தில் அந்த அணி வெற்றிகளை குவிக்கும் அவரது தலைமையில் சிறப்பாக விளையாடும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட அனைவரும் விரும்புவார்கள் என்று கூறி கோலி பேசியது குறிப்பிடத்தக்கது.

williamson 3

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டினையும் அவர்களுடன் பார்க்க முடிந்தது. அவர்கள் இருவரும் அவரிடமும் சில அறிவுரைகளை கூறியது போன்று தெரிகிறது. இவர்கள் இருவரது இந்த செயல்பாடு நேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது என்றே கூறலாம்.

Advertisement