சச்சின் மாதிரி அவங்களை ஈர்த்த கோலியின் ஓய்வு.. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாபெரும் இழப்பு.. மொய்ன் அலி

Moeen Ali 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் சச்சின் டெண்டுல்கர் இடத்தை நிரப்பும் அளவுக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வந்தார். அத்துடன் உலகின் அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் பெரிய ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

அதை விட கேப்டனாக இந்தியாவுக்கு 40 வெற்றிகளைப் பெற்ற அவர் வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய டெஸ்ட் கேப்டன் என்ற இரட்டை சாதனைகளைப் படைத்துள்ளார். அப்படிப்பட்ட அவர் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக இருப்பதால் இன்னும் சில வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று நம்பப்பட்டது. இருப்பினும் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது.

- Advertisement -

விடை பெற்ற கிங்:

அந்தத் தோல்விக்கு காரணமான ரோஹித் சர்மாவை பிசிசிஐ அடுத்த இங்கிலாந்து தொடரில் கழற்றி விட முடிவெடுத்தது. அதற்கு முன்பாக ரோகித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் அவரது நண்பனாக விடை பெற்றுள்ளார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் போல விளையாடிய விராட் கோலி ரசிகர்களை டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி ஈர்த்ததாக இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி தெரிவித்துள்ளார்.

எனவே விராட் கோலி ஓய்வு பெற்றது இந்தியாவுக்கு மட்டுமின்றி மொத்த டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் பெரிய இழப்பு என்று அவர் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியின் ஓய்வு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய இழப்பாகும்”

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இழப்பு:

“டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வத்துடன் விளையாடுவதில் அவர் முன்னோடியாக இருந்தார். அவர் எப்போதும் டெஸ்ட் போட்டிகளை நோக்கி தன்னை தள்ளினார். அற்புதமான கேரியர். அபாரமான வீரர். அதே சமயம் அவர் போதுமான அளவுக்கு விளையாடியுள்ளார். குறிப்பாக இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் நிறைய செய்துள்ளார்”

இதையும் படிங்க: கில் பிளேயிங் லெவனில் இருக்கவே தகுதியில்ல.. அந்த 3 பேரில் ஒருவரை கேப்டனாக்குங்க.. ஸ்ரீகாந்த் விளாசல்

“சச்சின் டெண்டுல்கருக்கு பின் மைதானங்கள் நிரம்பும் அளவுக்கு ரசிகர்கள் அவரது ஆட்டத்தை பார்க்க வரக்கூடிய வீரர் என்று நினைக்கிறேன். அற்புதமான ரெக்கார்டுகளை கொண்ட அவர் சிறப்பான வீரர். அவர் விளையாடிய பாணி மிகவும் போட்டித் தன்மையாக இருந்தது. அவர் சிறந்த கேப்டனாகவும் செயல்பட்டார். அவர் விடை பெற்றது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரிய அடி” என்று கூறினார்.

Advertisement