எங்க இந்தியாவையா இழிவா பேசுனீங்க.. தெ.ஆ கோச் சுக்ரி மூக்குடைக்கும் வகையில் விராட் கோலி பதிலடி

Virat Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக கௌஹாத்தியல் நடைபெற்ற 2வது போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மெகா தோல்வியை சந்தித்தது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தங்களது மிகப்பெரிய தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்தது.

முன்னதாக கௌகாத்தியில் நடைபெற்ற 2வது போட்டியின் 4வது நாளில் வெற்றிப் பெறுவதற்கு தேவையான முன்னிலையைப் பெற்ற தென்னாப்பிரிக்கா டிக்ளர் செய்வதற்கு தாமதப்படுத்தியது. அது பற்றி கேட்டதற்கு இந்தியாவை தாங்கள் வெற்றியை நெருங்க விடாமல் அதிக நேரம் களத்தில் விளையாட வைத்து நோகடிக்க விரும்பியதாலேயே தாமதகமாக டிக்ளேர் செய்ததாக தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட் தெரிவித்தார். ஆனால் அதைச் சொல்வதற்காக அவர் க்ரோவெல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது சர்ச்சையை உண்டாக்கியது.

- Advertisement -

இழிவாக பேசிய கோச்:

அதாவது க்ரோவெல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பல இழிவான பொருட்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக 1976இல் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்து க்ரோவெல் செய்ய விரும்புவதாக அதாவது அடிமைப்படுத்த விரும்புவதாக இங்கிலாந்து கேப்டன் டோனி கிரைக் இனவெறியை தூண்டும் வகையில் பேசினார். அதனால் ரத்தம் கொதிப்பதாக சொன்ன க்ளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 0 – 3 (3) என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து அவருக்கு பதிலடி கொடுத்தது.

அதே தொனியில் இந்தியாவையும் க்ரோவெல் செய்ய விருப்பவதாக சுக்ரி தெரிவித்தார். அதே சமயம் தவறான பொருளில் தாம் அந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் வஞ்சப்புகழ்ச்சி போல இந்தியாவை இழிவாக பேசிய அவருக்கு அனில் கும்ப்ளே, பார்திவ் பட்டேல் போன்ற முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

- Advertisement -

விராட் கோலி பதிலடி:

சொல்லப்போனால் இந்தியாவை நீங்கள் அப்படி பேசியிருக்கக்கூடாது என்று தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டைனும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்த சூழ்நிலையில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் 135 ரன்களை விளாசிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினார்.

இதையும் படிங்க: வெற்றிக்கான பாரட்டை கேட்ட கம்பீர்.. அதை உருவாக்கியதே ரோஹித், டிராவிட் என்பதை நினைவுப்படுத்திய அஸ்வின்

அப்போட்டியின் முடிவில் வழக்கம் போல இரு அணிகளும் கை கொடுத்துக் கொண்டனர். அப்போது அனைத்து தென்னாப்பிரிக்கர்களுக்கும் கை கொடுத்த விராட் கோலி இந்தியாவை இழிவாகப் பேசிய சுக்ரிக்கு மட்டும் கை கொடுக்கவில்லை. குறிப்பாக அவரைப் பார்த்த விராட் கோலி எந்த ரியாக்சனும் கொடுக்காமல் கையையும் கொடுக்காமல் பின்னால் வந்தவருக்கு கையைக் கொடுத்தார். அதனால் அவமானத்துடன் சுக்ரி அங்கிருந்து நகர்ந்து சென்றார். அந்த வகையில் இந்தியாவை இழிவாக பேசிய உங்களுக்கெல்லாம் கையைக்கொடிக்க முடியாது என்ற வகையில் அவருக்கு விராட் கோலி பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement