எனது கிரிக்கெட் வாழ்வின் 11 ஆம் ஆண்டு. சிறப்பு பதிவினை பதிவிட்ட – கிங் கோலி

Virat
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்றோடு கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். ஆகஸ்ட் 18ம் தேதி 2008 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாடிய துவங்கிய விராட் கோலி இதுவரை எண்ணற்ற சாதனைகளை புரிந்துள்ளார்.

Kohli

- Advertisement -

இந்நிலையில் தனது 11 வருட கிரிக்கெட் வாழ்க்கை குறித்து விராட் கோலி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : 2008 ஆம் ஆண்டில் இதே நாளில் ஒரு இளைஞனாக எனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கி 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பயணத்தை வெற்றிகரமாக வரவைத்த கடவுளுக்கு நன்றி.

கடவுள் அளித்த ஆசிர்வாத்தின் காரணமாக நான் கனவு கண்ட அனைத்தும் நடந்தது நான் நினைத்ததை பின்பற்றுவதற்கும் சரியான பாதையில் எப்போதும் பின்பற்றுவதற்கும் அவர் ஒருவரே காரணம் என்று கூறி தனது விட்டுள்ளார். இதோ அந்த பதிவு :

2008 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம் மற்றும் தற்போது எடுத்த புகைப்படம் இரண்டையும் அவர் அதில் பகிர்ந்துள்ளார். விராட் கோலி 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி இலங்கை அணிக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் தொடங்கிய கோலி அதன்பிறகு இந்திய அணிக்காக இதுவரை 239 போட்டிகளில் விளையாடி 11520 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement