இலங்கையில் இந்திய அணி பெற்ற வெற்றியில் குறிப்பிட்டு 2 வீரர்களை பாராட்டிய விராட் கோலி – விவரம் இதோ

ind

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் உள்ளது. இவ்வேளையில் ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல தற்போது இலங்கையில் சென்று 3 டி20 போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

deepak

இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது இக்கட்டான நேரத்தில் வெற்றியை உறுதிசெய்த தீபக் சாகர் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் குவித்து ஓவர் நைட்டில் ஹீரோவாக மாறியுள்ளார். அதேபோன்று அவருடன் துணை நின்ற புவனேஸ்வர் குமாரும் சிறப்பாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

- Advertisement -

துவக்கத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்த இந்திய அணி 8 வது விக்கெட்டுக்கு தீபக் சாஹர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றி சாதாரண வெற்றியாக பார்க்கப்படவில்லை. ஏனெனில் கிட்டத்தட்ட போட்டியை இழந்துவிடுவோம் என்ற நிலையிலிருந்து இந்திய அணி இந்த வெற்றியைப் பெற்று உள்ளதால் இந்த வெற்றிக்கான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

deepak

இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி போட்டியை பார்த்தது மட்டுமின்றி இந்திய வீரர்கள் குறித்த தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் இரண்டு வீரர்களை குறிப்பிட்டு தனது சிறப்பு பாராட்டையும் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் :

- Advertisement -

“கிரேட் வின் தி பாய்ஸ்” இக்கட்டான சூழ்நிலையிலிருந்து இந்திய அணி மீண்டு வந்தது சிறப்பான ஆட்டம், பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. “வெல்டன் தீபக் சஹர் அன்ட் சூர்யகுமார் யாதவ்” என்று அவர்கள் இருவரையும் பாராட்டி ட்வீட் செய்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement