உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ் நாளிதழ் – கோலி எத்தனையாவது இடம் தெரியுமா ?

Kohli-4
- Advertisement -

உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் வருடாவருடம் வெளியிடுவது வழக்கம். பொதுவாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பிடிக்க மாட்டார்கள். 2013ம் ஆண்டிலிருந்து டோனி இடம் பிடித்து வந்தார். அவரைத்தவிர வேறுயெந்த கிரிக்கெட் வீரரும் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

Kohli

- Advertisement -

அதன் பின்னர் தற்போது கடந்த சில வருடங்களாக விராட் கோலி இந்த பட்டியலில் இடம்பிடித்து வருகிறார். சென்ற வருடம் மட்டும் 25 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி அவர் 100வது இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் இந்த வருடத்திற்கான பட்டியலை போர்ப்ஸ் இதழ் அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில் 34 இடங்கள் முன்னேறி 66-வது இடத்தை பிடித்துள்ளார்.

விராட் கோலி மொத்தம் 26 மில்லியன் டாலர் இந்த வருடம் மட்டும் வருவாய் ஈட்டி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 196 கோடி ரூபாய் ஆகும். விளையாட்டு போட்டிகளின் மூலம் வெறும் இரண்டு மில்லியன் டாலர் மட்டுமே சம்பாதிக்கிறார். மீதமுள்ள 24 மில்லியன் டாலரை விளம்பர ஒப்பந்தம், விளம்பர தூதர் போன்றவற்றை வைத்து சம்பாதிப்பதாக அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.

Kohli-1

இதில் முதல் இடத்தில் டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் 106.3 மில்லியன் சம்பாதிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (105 மில்லியன் டாலர்), லியோனல் மெஸ்ஸி 104 மில்லியன் டாலர்), நெய்மர் (95.5 மில்லியன் டாலர்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றனர்.

Kohli

கடந்த ஆண்டு 100 ஆவது இடம் பிடித்த கோலி இந்தாண்டு 66 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மேலும் கோலியின் வருமான கணக்கை கண்ட ரசிகர்கள் சிலர் யோசித்துப்பார்த்தால் தலைசுற்றுவதாக தங்களது கமெண்டுகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement