மீண்டும் ஏமாற்றம் தந்த விராட் கோலியின் அணித்தேர்வு – டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணியானது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது லீட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

indvseng

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துவிட்டு அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசினார். அதுகுறித்து அவர் பேசுகையில் : நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். மைதானத்தில் புற்கள் இல்லாததால் ரன்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

கடந்த போட்டியில் விளையாடிய அதே அணி தான் இந்த போட்டியில் விளையாடும் என்று கேப்டன் கோலி அறிவித்தார். கோலியின் இந்த அறிவிப்பினால் கடந்த இரண்டு போட்டிகளாக வாய்ப்பை பெறாமல் வெளியில் அமர்ந்து வந்த அஷ்வின் இன்றைய போட்டியிலும் வெளியில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

Ashwin

ஏற்கனவே அஷ்வின் தேர்வு குறித்து கோலி மீதான விமர்சனம் இருந்த நிலையில் மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் தரும் வகையில் விராட் கோலி அஷ்வினை நீக்கியுள்ளார் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இதோ :

1) ரோஹித் சர்மா, 2) கே. ராகுல், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ரஹானே, 6) பண்ட், 7) ஜடேஜா, 8) பும்ரா, 9) சிராஜ், 10) முகமது ஷமி, 11) இஷாந்த் சர்மா

Advertisement