
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 350 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது அதிகபட்சமாக விராட் கோலி சதமடித்து 135, ரோஹித் சர்மா 57, கேப்டன் ராகுல் 60, ரவீந்திர ஜடேஜா 32 ரன்கள் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு பயத்தைக் காட்டும் வகையில் விளையாடி 49.2 ஓவரில் 332 ரன்கள் எடுத்து போராடி தோற்றது. அதிகபட்சமாக மேத்தியூ பிரட்ஸ்கே 72, மார்கோ யான்சென் 70, கோர்பின் போஸ்க் 67 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4, ஹர்ஷித் ராணா 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.
ஆட்டநாயகன் கிங் கோலி:
அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இந்தியா இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் 37 வயதிலும் இந்தியாவை வெற்றி பெற வைப்பதற்கு தம்முடைய ஃபிட்னஸ் மற்றும் அனுபவமே காரணம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தளவுக்கு சென்ற இன்றைய போட்டியில் விளையாடியது நன்றாக இருந்தது. முதல் 20 – 25 ஓவர்களுக்குப் பின் பிட்ச் ஸ்லோவாக மாறுவதற்கு முன் ஓரளவு நன்றாக விளையாடியது. நீங்கள் நன்றாக துவங்கிய பின், சூழ்நிலைகளுக்குள் சென்ற பின் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கே தான் அனுபவம் வருகிறது”
அனுபவமே சிறந்த ஆசான்:
“நான் எப்போதும் பெரிதாக தயாராவதை நம்புபவன் கிடையாது. அனைத்து தயாராகும் முறைகளும் மனதைப் பற்றியது. உடல் தயாராக இருக்கும் வரை மனது கூர்மையாக இருக்கும் வரை உங்களது ஆட்டம் நன்றாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அடுத்தப் போட்டிக்கு முன் நான் ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொள்வேன். ஏனெனில் 37 வயதாகும் எனக்கும் புத்துணர்ச்சி பெற நேரம் தேவை”
இதையும் படிங்க: வெறும் 17 ரன்ஸ்.. பயத்தைக் காட்டிய தெ.ஆ.. ஒய்டு எஸ்ட்ராவால் தப்பிய இந்தியா த்ரில் வெற்றி
“நீங்கள் ஒரு வகையான கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும் போது அப்படித்தான் நடக்கும். நீங்கள் 300+ போட்டிகளில் விளையாடியுள்ளீர்கள் என்பது நிறைய கிரிக்கெட்டில் விளையாடி வீட்டீர்கள் என்பதாகும். அதனால் எப்போது பயிற்சி எடுக்க வேண்டும் என்பது தெரியும். நீண்ட நேரம் விளையாடுவதற்கான உடல் தகுதியும் பிரதிபலிப்பும் உங்களிடம் இருப்பதும் தெரியும். நீங்கள் நன்றாக பந்தை அடித்து ஃபிட்டாக மனதளவில் தயாராக இருக்கும் வரை தொடர்ந்து விளையாட உற்சாகமாக இருப்பீர்கள்” என்று கூறினார்.