தோனி இல்லை.. அவர்கிட்ட தான் எல்லா கஷ்ட நஷ்டங்களை ஷேர் பண்ணிக்குவேன்.. தனது நண்பன் பற்றி கோலி

VIrat Kohli 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சர்வதேச அளவில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். உலக கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு பின் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதே போல ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்கள் குவித்துள்ள அவர் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வருகிறார்.

முன்னதாக விராட் கோலி அறிமுகமான ஆரம்பக் காலங்களில் தடுமாற்றமாக விளையாடினார். அந்த சமயங்களில் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி அவருக்கு இந்திய அணியில் நிறைய ஆதரவு கொடுத்து வாய்ப்புகளை வழங்கினார். அதனால் சீனியர் என்பதைத் தாண்டி தோனியை தம்முடைய நண்பராக கருதும் விராட் கோலி அவரிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்.

- Advertisement -

சிறந்த நண்பன்:

குறிப்பாக 2019க்குப்பின் சதத்தை அடிக்காததால் விமர்சிக்கப்பட்ட போதும், 2022இல் ஒருநாள் கேப்டன்ஷிப் பொறுப்பை பிசிசிஐ பறித்த போதும் யாருமே தம்மிடம் பேசவில்லை என்று விராட் கோலி கூறினார். ஆனால் அப்போது தோனி மட்டுமே மெசேஜ் செய்து ஆதரவு தெரிவித்ததாக விராட் கோலி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தோனியை விட தனது மாநிலத்தைச் சேர்ந்த இஷாந்த் சர்மாவிடம் தான் அனைத்து கஷ்ட நஷ்டங்களையும் பகிர்ந்து கொள்வதாக விராட் கோலி கூறியுள்ளார்.

ஏனெனில் கிரிக்கெட்டில் விளையாடத் துவங்கிய முதல் நாளிலிருந்தே அவர் தன்னுடைய நண்பனாக இருப்பதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இஷாந்த்திடம் முதல் நாளிலிருந்தே இயற்கையாக நான் தொடர்பு கொண்டுள்ளேன். நாங்கள் ஒன்றாக விளையாடுகிறோம் இல்லை என்பதைத் தாண்டி எங்களுடைய நட்பு எப்போதும் மாறவில்லை”

- Advertisement -

கோலி நெகிழ்ச்சி:

“எந்த மதிப்பீடும் இல்லாமல் முழுமையான புரிதலுடன் அவரிடம் நான் அனைத்தையும் பகிர்ந்து கொள்வேன். அவர் எனது வாழ்க்கையில் மிகவும் ஸ்பெஷலான நபர். நீங்கள் ஒருவருடன் வலுவான முறையில் இணைந்திருக்கும் போதெல்லாம் அவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் மற்றும் கடந்து சென்றிருப்பார்கள் என்பதை நீங்களும் உணரலாம்”

இதையும் படிங்க: கிடைச்ச ஒரு வாய்ப்பும் வேஸ்ட்டா போச்சு.. இனி சான்ஸ் கிடைக்குறது கஷ்டம் – நடராஜனுக்கு நேர்ந்த சோகம்

“அந்த ஆற்றல் அனைவரையும் சென்றடையும் என்று நினைக்கிறேன். நாங்கள் அனைவரும் அதைப் பற்றி உணர்ச்சி வசப்பட்டோம். ஏனென்றால் நாங்கள் நீண்ட காலமாக நட்பாக இருக்க முயற்சிக்கிறோம். காரணம் இங்கே நிறைய மேடு பள்ளங்கள் வந்து செல்லும்” என்று கூறினார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விராட் கோலி 505 ரன்கள் குவித்து பெங்களூரு அணி வெற்றிக்காக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement