சச்சினை விட கிங் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் – கம்பேர் செய்பவர்களுக்கு விராட் கோலி கொடுத்த பதில் இதோ

Sachin Virat Kohli
- Advertisement -

டெல்லியை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்பத்தில் தடுமாறினாலும் குறுகிய காலத்திலேயே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தைப் பிடித்தார். குறிப்பாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் அவரது இடத்தில் அவரைப் போலவே ரன் மெஷினாக உலகின் டாப் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு வரும் விராட் கோலி 25000+ ரன்களையும் 75 சதங்களையும் விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக போற்றும் அளவுக்கு சாதனைகளை படைத்து வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டின் பேட்டிங் துறையில் இப்போதும் தன்வசம் வைத்துள்ள சச்சின் டெண்டுல்கரின் நிறைய சாதனைகளை அவரை விட வேகமாக விராட் கோலி உடைத்து வருகிறார். எடுத்துக்காட்டாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10000 ரன்கள் அடித்த சச்சினின் சாதனையை ஏற்கனவே உடைத்துள்ள அவர் 34 வயதிலேயே 75 சதங்களையும் அடித்துள்ளதால் 100 சதங்கள் உலக சாதனையையும் உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வேகமாகவும் மிகச் சிறப்பாகவும் செயல்பட்டு வருவதால் சமீப காலங்களாகவே ஏராளமான ரசிகர்களும் நிறைய முன்னாள் வீரர்களும் அவருடன் விராட் கோலியை ஒப்பிட்டு பேசி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

சச்சினுடன் ஒப்பீடு:
இருப்பினும் சச்சினை ரோல் மடலாக கொண்ட கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களைப் போலவே விராட் கோலியும் அவரை தன்னுடைய குருவாக பாவித்து வருகிறார். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸின் விவ் ரிச்சர்ட்ஸ் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தம்முடைய ரோல் மாடல் என்று சமீபத்தில் விராட் கோலி வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தளவுக்கு உயர வேண்டும் என்பதை கனவு கண்டாலும் அதற்காக சச்சினிடம் ஒப்பிடும் அளவுக்கு எப்போதும் ஆசைப்பட்டதில்லை என்று அவருடனான ஒப்பீடுகளுக்கு விராட் கோலி பதிலளித்துள்ளார்.

Sachin

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுடன் நிகழ்த்திய உரையாடலில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னிடம் திறமை இருக்கிறது ஆனால் அதற்காக அது முழுமையானது அல்லது கடவுளே இதை நம்ப முடியவில்லை என்று சொல்லும் அளவுக்கு இல்லையென்று நான் எப்போதும் அனைவரிடமும் சொல்கிறேன். நல்ல திறமையுடைய என்னால் சிறியவற்றை செய்ய முடிகிறது. ஆனால் அதற்காக நான் நம்ப முடியாதவற்றை புயலை போல் செயல்பட்டு மாற்றுவதற்கு பரிசாக படைக்கப்பட்டவன் அல்ல. இளம் வயதிலிருந்தே நான் சிலவற்றை கனவு கண்டேன்”

- Advertisement -

“அதாவது தற்போதைய 34 வயதில் நான் இங்கே உட்கார்ந்திருக்கும் இந்த நிலைமையை அடைய வேண்டுமென்ற கனவு கண்டேன் என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதற்காக சச்சினுடன் என்னை ஒப்பிடும் போது மிகவும் பயமடையும் நான் இப்படி ஒப்பிட்டு பேசுபவர்கள் இந்த சாதனைகளை எங்கிருந்து கையிலெடுத்துக் கொண்டு வருகிறார்கள் என்று வேடிக்கையாக நினைப்பேன். இருப்பினும் இந்த புள்ளி விவரங்கள் எல்லாம் வித்தியாசமான கதையை சொல்லும்”

Virat-Kohli

“ஏனெனில் சிறுவயதில் நீங்கள் வளரும் போது ஒருவர் உங்களிடம் ஏற்படுத்திய தாக்கத்திற்கு எந்த ஒப்பிடும் இருக்க முடியாது. எனவே அதை நான் பார்க்கும் போதெல்லாம் சிரித்து விட்டு செல்வேன். ஏனெனில் சச்சின் டெண்டுல்கர் எனக்கு உணர்வைப் போன்றவர். நீங்கள் யாரிடமாவது பேசினால் அவர்கள் சச்சினை தங்களுக்கு சொந்தமாக பார்க்கிறார்கள். ஏனெனில் அனைவரும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் அவர் அனைவருக்கும் உத்வேகம் மற்றும் ஆறுதலுக்கு ஆதாரமாக இருக்கிறார். அவர் ரன்கள் எடுத்த போது இந்திய அணியின் நிலைமை நன்றாக இருந்தது”

இதையும் படிங்க:IPL 2023 : அப்ரிடிய விட கம்மியா இருக்கு – சீக்கிரம் முன்னேறுங்க, அர்ஜுன் டெண்டுல்கர் பவுலிங் – பற்றி ரசிகர்கள் அதிருப்தி கருத்து

“அத்துடன் ரிச்சர்ட்ஸ் மற்றும் சச்சின் ஆகியோருடன் யாரையும் ஒப்பிடக் கூடாது. ஏனெனில் அவர்கள் தங்களுடைய தலைமுறையில் கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தி மக்களிடம் தன்னம்பிக்கை ஏற்படுத்திய அரிதான மகத்தான வீரர்கள்” என்று கூறினார். அதாவது புள்ளி விவரங்கள் மற்றும் சாதனைகளை தாண்டி கிரிக்கெட்டை விளையாடுவதற்கு உத்வேகத்தை ஏற்படுத்திய சச்சினுடன் தம்மை ஒப்பிடுவது எந்த வகையிலும் சரியாகாது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Advertisement