- Advertisement -

2022 கஷ்ட காலத்துல நண்பனா உட்கார்ந்து பேசுனாரு.. டிகே கொடுத்த தன்னம்பிக்கை பற்றி விராட் கோலி நெகிழ்ச்சி

ஐபிஎல் 2024 சீசனில் பெங்களூரு கிரிக்கெட் அணி பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் முதல் 7 போட்டிகளில் 6 தோல்வியை பதிவு செய்த அந்த அணி கடைசி 6 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இருப்பினும் ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை சந்தித்த ஆர்சிபி தொடர்ந்து 17வது வருடமாக கோப்பையை வெல்ல முடியாமல வெளியேறியது.

அத்துடன் ஐபிஎல் தொடரிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் பிரியா மனதுடன் விடை பெற்றார். கடந்த 2008 முதல் 17 வருடங்களாக 6 அணிகளுக்கு விளையாடிய அவர் மும்பை அணியில் சாம்பியன் பட்டம் வென்று 4000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அதனால் தோனிக்கு பின் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுத்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையுடன் அவர் விடைபெற்றார்.

- Advertisement -

விராட் கோலி பாராட்டு:
மேலும் 2022 சீசனில் பெங்களூரு அணியில் அபாரமாக விளையாடிய அவர் இந்தியாவுக்காக கம்பேக் கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது. அந்த வகையில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடைபெற்ற அவருக்கு விராட் கோலி கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் 2019க்குப்பின் சதமடிக்காததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த போது 2022 சீசனில் தினேஷ் கார்த்திக் நண்பனுக்கு நண்பனாக அருகே அமர்ந்து தன்னம்பிக்கையை கொடுத்ததாக விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் பற்றிய தனது நினைவுகள் பற்றி ஆர்சிபி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 2009 சாம்பியன்ஸ் டிராபியில் டிகே’வை முதல் முறையாக பார்த்தது நினைவிருக்கிறது. முதல் முறையாக உடைமாற்றும் அறையை பகிர்ந்து கொண்ட போது தினேஷ் கார்த்திக் மிகவும் வேடிக்கையானவராக இருப்பதை கண்டேன். அவர் அதிக சுறுசுறுப்பான குழப்பமான நபர் என்று நான் சொல்வேன்”

- Advertisement -

“பெரும்பாலான நேரங்களில் அவர் எல்லா இடங்களிலும் நகர்ந்து கொண்டிருப்பார். அதுவே அவரைப் பற்றி என்னுடைய அபிப்பிராயம். அற்புதமான திறமை கொண்ட பேட்ஸ்மேனான அவர் இப்போதும் அப்படியே இருக்கிறார். அவர் மிகவும் புத்திசாலியாகி அமைதியாகி விட்டார். களத்திற்கு வெளியே அவரிடம் நான் சில சுவாரஸ்யமான உரையாடல்களை கொண்டுள்ளேன். கிரிக்கெட்டை தாண்டி அவருக்கு பல்வேறு விஷயங்களில் நிறைய அறிவு இருக்கிறது”

இதையும் படிங்க: கே.எல் ராகுல் என்கிட்ட சொன்னது கரெக்ட் தான்.. இந்திய அணியின் கோச் பதவி எனக்கு வேண்டாம் – ஜஸ்டின் லாங்கர் கருத்து

“2022இல் எனக்கு ஐபிஎல் தொடர் சிறப்பாக அமையாத போது தன்னம்பிக்கையின்றி தடுமாறிக் கொண்டிருந்தேன். அப்போது சில நேரங்களில் என்னுடன் உட்கார்ந்த அவர் எப்படி சில அம்சங்களை பார்க்கிறார் என்பதை உண்மையாக விளக்கினார். ஒருவேளை அதை நான் எனது பார்வையில் பார்க்காமல் இருந்திருக்கலாம். அவர் தாம் நினைக்கும் விஷயங்களை தைரியமாக வெளிப்படையாக யாரிடம் வேண்டுமானாலும் பேசுவார். அதுவே அவரிடம் எனக்கு பிடித்த ஒரு விஷயம் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -