- Advertisement -
ஐ.பி.எல்

18 வருஷம் வெய்ட் பண்ண வெச்ச நீ ஒர்த் நண்பா.. இந்த கோப்பை அவங்களுக்கானது.. விராட் கோலி பதிவு

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் 17 வருடங்களாக சந்தித்த கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்த ஆர்சிபி முதல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. மறுபுறம் போராடித் தோல்வியை சந்தித்த பஞ்சாப் தங்களுடைய முதல் கோப்பையை முத்தமிடும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டது.

18 வருடங்கள் கழித்து பெற்ற இந்த வெற்றியை ஆர்சிபி ரசிகர்கள் தற்போது வெறித்தனமாகக் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக 18 வருடங்களாக போராடிக் கோப்பையை வென்ற விராட் கோலி களத்திலேயே ஆனந்தக் கண்ணீர் விட்டு மகிழ்ச்சியுடன் வெற்றியைக் கொண்டாடினார். மேலும் ஏபி டீ வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் போன்ற ஆர்சிபி ஜாம்பவான்களுடன் சேர்ந்து அவர் வெற்றியைக் கொண்டாடினார்.

- Advertisement -

18 வருட காத்திருப்பு:

இந்நிலையில் 2025 வருடத்தை எப்போதும் மறக்க மாட்டேன் என்று விராட் கோலி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மேலும் ஐபிஎல் கோப்பை எனும் நண்பனை தொடுவதற்காக 18 வருடங்கள் காத்திருந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இந்த 18 வருடங்களில் பலரும் தங்களைக் கிண்டல் மற்றும் விமர்சனம் செய்ததாக விராட் கோலி கூறியுள்ளார்.

அப்போது கீழே விடாமல் தங்களுக்கு ஆதரவு கொடுத்து ஆர்சிபி ரசிகர்களுக்காக இந்தக் கோப்பையை அர்ப்பணிப்பதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்த அணி கனவை சாத்தியமாக்கியுள்ளது. இந்த சீசனை எப்போதும் நான் மறக்க மாட்டேன். கடந்த இரண்டரை மாதங்களாக இந்தப் பயணத்தை நாங்கள் முழுமையாக மகிழ்ச்சியுடன் மேற்கொண்டோம்”

- Advertisement -

விராட் கோலி நெகிழ்ச்சி:

“இந்தக் கோப்பை மிகவும் மோசமான சமயங்களிலும் எங்களை கீழே விடாத ஆர்சிபி ரசிகர்களுக்கானது. இந்தக் கோப்பை பல வருடங்களாக நெஞ்சம் உடைந்து ஏமாற்றத்தைச் சந்தித்த ரசிகர்களுக்கானது. இது களத்தில் ஒவ்வொரு இன்ச்சும் முயற்சிகளைப் போட்டு வெற்றியைப் பெற்றுக் கொடுத்த அணிக்கானது. கோப்பையை பொறுத்த வரை – உன்னைத் தூக்கி கொண்டாடுவதற்கு நீ என்னை 18 வருடங்கள் காத்திருக்க வைத்து விட்டாய் நண்பா”

இதையும் படிங்க: 2017-ல் செய்ததை மீண்டும் செய்து வரலாற்று சாதனையை நிகழ்த்திய க்ருனால் பாண்டியா – விவரம் இதோ

“பரவலாயில்லை இது அந்த காத்திருப்புக்கு மிகவும் தகுதியானது (ஒர்த்)” என்று கூறியுள்ளார். மொத்தத்தில் சச்சின் டெண்டுல்கர் காத்திருந்து உலகக் கோப்பையை வென்றது போல விராட் கோலியும் ஐபிஎல் கோப்பையை போராடி வென்றது பல ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இனிமேல் ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கெத்தாக பேசப் போகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -