Virat Kohli : ஒட்டு போடமுடியாமல் போன கேப்டன் கோலி. இந்திய குடிமகனே கிடையாதா ? – காரணம் இதுதான்

இந்தியாவில் தற்போது 7 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி மும்பை தெற்கு பகுதியில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் இந்திய அணியின்

Kohli
- Advertisement -

இந்தியாவில் தற்போது 7 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி மும்பை தெற்கு பகுதியில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் இந்திய அணியின் கேப்டன் கோலி வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணமும் தற்போது வெளியாகியுள்ளது.

anushkoli

- Advertisement -

அதன்படி டெல்லியை பூர்வீகமாக கொண்ட கோலி அனுஷ்கா சர்மாவுடன் திருமணம் புரிந்து கொண்டதால் அவரின் வசதிக்காக மும்பை வொர்லி பகுதிக்கு குடிபெயர்ந்தார். அனுஷ்கா சர்மாவிற்கு ஆரம்ப காலத்தில் இருந்து மும்பையில் வாக்குரிமை உள்ளது. ஆனால், கோலிக்கு டெல்லியிலே வாக்குரிமை உள்ளது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், வேறு இடத்தில் இருந்து வாக்களிக்க விரும்பும் வாக்காளர்களும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையினை வழங்கி இருந்தது. அதன்படி கோலியும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். ஆனால், கோலி வரையறுக்கப்பட்ட நாள் கடந்து விண்ணப்பித்தால் அவரின் விண்ணப்பம் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

viratkoli

மார்ச் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டிய விண்ணப்பத்தினை கோலி தற்போது காலம் கடந்து விண்ணப்பித்தால் அவரின் விண்ணப்பம் நிலுவையில் வைக்கப்பட்டது. அதனால் கோலி தற்போது வாக்களிக்க முடியாத நிலை உண்டாகியுள்ளது. இந்த செய்தியை இணையத்தின் மூலம் அறிந்த ரசிகர்கள் சிலர் கோலி இந்திய குடிமகன் இல்லையா ? நாடறிந்த ஒரு பிரபலத்திற்கு வாக்குரிமை இல்லையா ? என்று வார்தைப்போர் நடத்தி வருகின்றனர்.

Advertisement