இன்னும் 25 ரன்கள் அடிச்சா போதும்.. சச்சின் மற்றும் சங்ககாராவுக்கு அடுத்து விராட் கோலி – படைக்கப்போகும் சாதனை

Kohli and Sachin
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜனவரி 11-ஆம் தேதி வடோதராவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்ககாரா ஆகியோருடன் இணைந்து மூன்றாவது வீரராக ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

விராட் கோலி நிகழ்த்த காத்திருக்கும் சரித்திர சாதனை :

அந்த வகையில் விராட் கோலி நிகழ்த்த காத்திருக்கும் சாதனை யாதெனில் : இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 556 ஆட்டங்களில் விளையாடியுள்ள விராட் கோலி 623 இன்னிங்ஸ்களில் 27975 ரன்கள் குவித்துள்ளார். இதில் 84 சதங்கள் மற்றும் 145 அரை சதங்கள் ஆகியவை அடங்கும்.

- Advertisement -

அதோடு ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவரது சராசரி 52.58 என்கிற அளவில் உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் மேலும் 25 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச போட்டிகளில் 28000 ரன்களை பூர்த்தி செய்த மூன்றாவது சர்வதேச வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

இவருக்கு முன்னதாக சர்வதேச வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்காரா ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள வேளையில் அவர்களுக்கு அடுத்து மூன்றாவது ஜாம்பவானாக இந்த சாதனையை விராட் கோலி நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சர்வதேச போட்டிகளை பொறுத்த வரை கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இதுவரை 664 போட்டிகளில் விளையாடி 782 இன்னிங்ஸ்களில் 34357 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். இதில் 100 சதங்கள் மற்றும் 164 அரைசதங்கள் அடங்கும்.

இதையும் படிங்க : எல்லாம் என் விதி.. டி20 உலககோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து மவுனம் கலைத்த – கேப்டன் கில்

அதே போன்று அவருக்கு அடுத்து இலங்கை அணியின் முன்னாள் இடது கை ஆட்டக்காரரான குமார் சங்ககாரா 594 போட்டிகளில் விளையாடி 666 இன்னிங்ஸ்களில் 28,016 ரன்கள் குவித்துள்ளார். இதில் 63 சதம் மற்றும் 153 அரை சதங்கள் அடங்கும்.

Advertisement