உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலில் இந்திய வீரர்…பிரபல டைம் இதழ் கௌரவம்..! – யார் தெரியுமா ?

dhoni
- Advertisement -

புகழ் பெற்ற டைம் இதழின் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பிடித்துள்ளார்.அமெரிக்காவின் புகழ் பெற்ற டைம் இதழ் ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க 100 பேர் பெயர்களை வெளியிடுவது வழக்கம். இந்த 100 பேரையும் டைம் இதழின் வாசகர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு செய்துவருகின்றனர்.
virat kohli

பின்னர் இந்த 100 பேரிலிருந்து ஒருவர் `Person of the Year’ ஆகத் தேர்ந்தெடுக்கப்படுவர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் டைம் இதழின் அட்டைப்படத்தில் இடம்பிடிப்பர். இந்த இதழின் அட்டைப் படத்தில் இடம் பிடிப்பது உலக அரசியல் தலைவர்களுக்கு கௌரவமான விஷயம். இந்தக் கௌரவம் இந்திய பிரதமர் மோடிக்கு இருமுறை கிடைத்துள்ளது.

- Advertisement -

2012, 2015-ம் ஆண்டுகளில் மோடியின் புகைப்படம் அட்டைப் படத்தில் வந்துள்ளது. இதில் 2012-ம் ஆண்டு அவர் `Person of the Year’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். தொடர்ச்சியாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.
virat1

இந்தப் பட்டியலில் மொத்தம் 6 விளையாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்காவுக்கு வெளியே உள்ள வீரர்களாக கோலியும், டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரும் இடம்பெற்றுள்ளார். மற்ற 4 பேரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதேபோல் ஓலா கேப்ஸ் ஓனர் பவானிஷ் அகர்வால், நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட இந்திய பிரபலங்களும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

Advertisement