IND vs PAK : சாத்தியமே இல்லாத போட்டியை முடித்து கொடுத்த விராட் கோலி. அனல் பறந்த போட்டி – ஜெயிச்சது எப்படி?

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 23ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கியது. அதற்கு வந்த சுமார் லட்சம் ரசிகர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து வருண பகவான் வழிபட்ட நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு தன்னுடைய முதல் ஓவரிலேயே கேப்டன் பாபர் அசாமை கோல்டன் டக் அவுட்டாக்கிய அர்ஷிதீப் சிங் 2வது ஓவரில் முகமது ரிஸ்வானை 4 (12) ரன்களில் காலி செய்தார்.

அதனால் 15/2 என மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்து நங்கூரத்தை போட்ட ஷான் மசூட் – இப்திகர் அஹமத் ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு 3வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். குறிப்பாக அக்சர் படேல் வீசிய 12வது ஓவரில் 21 ரன்களை விளாசிய இப்திகர் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 51 (34) ரன்களில் அவுட்டானார். அப்போது மிடில் ஆர்டரில் சடாப் கான் 5 (6), ஹைதர் அலி 2 (4), முகமத் நவாஸ் 9 (6) என முக்கிய வீரர்கள் ஹர்திக் பாண்டியாவிடம் சீரான இடைவெளியில் அவுட்டானார்கள்.

- Advertisement -

போராடிய இந்தியா:
கடைசியில் மறுபுறம் நங்கூரமாக நின்ற ஷான் மசூட் 5 பவுண்டரியுடன் 52* (42) ரன்களும் ஷாஹீன் அப்ரிடி 16 (8) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் பாகிஸ்தான் 159/8 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே தடவிய கேஎல் ராகுல் 4 (8) ரன்களிலும் கேப்டன் ரோகித் சர்மா 4 (7) ரன்களிலும் வெளியேறினார்.

அதனால் ஏற்பட்ட அழுத்தத்தை அடித்து விரட்ட முயன்ற சூரியகுமாரும் 15 (10) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் ஆச்சரியப்படும் வகையில் களமிறங்கிய அக்சர் பட்டேல் 2 (3) ரன்களில் ரன் அவுட்டானார். அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று திண்டாடிய இந்தியாவை விராட் கோலி – ஹர்திக் பாண்டியா ஆகியோர் நங்கூரமாக நின்று 12வது ஓவரில் 20 ரன்களைக் குவித்து உட்பட நேரம் செல்ல செல்ல அதிரடியாக தூக்கி நிறுத்த போராடினார்கள். அதனால் கடைசி 3 ஓவரில் 42 ரன்கள் தேவைப்பட்ட போது ஷாஹீன் அப்ரிடி வீசிய 18வது ஓவரில் 17 ரன்களை அந்த ஜோடி விளாசியது.

- Advertisement -

அதனால் கடைசி 12 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்ட போது ஹாரீஸ் ரவூப் 1, 1, 0, 1 என சவால் கொடுத்தாலும் கடைசி 2 பந்துகளில் விராட் கோலி மெகா சிக்சர்களை பறக்க விட்டார். அதனால் நவாஸ் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்திலேயே 1 பவுண்டரி 2 சிக்சருடன் 40 (36) ரன்களில் பாண்டியா அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த பந்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுக்க 3வது பந்தில் விராட் கோலி 2 ரன்கள் எடுத்து 4வது பந்தில் சிக்ஸர் பறக்க விட்டார். அதிர்ஷ்டவசமாக இடுப்பளவு வந்ததால் அந்தப் பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்ட போது அதே பந்தை பவுலர் மீண்டும் ஒய்ட் போட்டார். அதனால் 3 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது விராட் கோலி க்ளீன் போல்ட்டானாலும் அந்த பந்து பிரீ ஹிட் என்பதை பயன்படுத்தி 3 ரன்களை இந்தியா எடுத்தது.

அதனால் கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது தினேஷ் கார்த்திக் 1 (1) ரன்னில் ஸ்டம்ப்பிங் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது களமிறங்கிய அஷ்வினுக்கு பவுலர் ஒய்ட் போட்டார். அதனால் ஒரு பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது பீல்டர்கள் உள்ளே இருந்தாலும் லாவகமாக தூக்கி அடித்த அஷ்வின் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அதனால் 20 ஓவர்களில் 160/6 ரன்களை எடுத்து வென்ற இந்தியா கடந்த வருடம் துபாயில் கொடுத்த தோல்விக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த பழி தீர்த்தது.

இப்போட்டியில் பந்து வீச்சில் ஆரம்பத்தில் அசத்தினாலும் கடைசியில் 20 ரன்களை எக்ஸ்ட்ராவாக வழங்கியது. அதைவிட 160 ரன்களை துரத்தும் போது ஆரம்பத்திலேயே 4 பேட்ஸ்மென்கள் அவுட்டானது பெரிய அழுத்தத்தை கொடுத்தது. இருப்பினும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட பாண்டியா கடைசியில் அவுட்டானாலும் கடைசி வரை அவுட்டாகாமல் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்கள் குவித்த விராட் கோலி பாகிஸ்தானை ஆளப்பிறந்தவன் என்பதை நிரூபித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ரசிகர்களுக்கு தீபாவளி பரிசளித்துள்ளார்.

Advertisement