முதலில் அவர் பார்ம் அவுட்டே கிடையாது – விராட் கோலியின் தரத்தை வியந்து பாராட்டும் உலகின் நம்பட் ஒன் டி20 பவுலர்

Kohli-1
- Advertisement -

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 15ஆவது முறையாக வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்லப் போவது யார் என்பதை விட இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் கடந்த 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்து வரும் அவர் சுமார் 3 வருடங்களாகியும் பார்மை மீட்டெடுக்காததால் அணியிலிருந்து நீக்குமாறு நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளார்கள்.

Virat-Kohli

- Advertisement -

இத்தனைக்கும் கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் கிட்டத்தட்ட 50 என்ற அபாரமான பேட்டிங் சராசரியில் உலகின் அனைத்து இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் வெளுத்து வாங்கி ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்துள்ள அவர் 33 வயதிலேயே 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ளார். அதுபோக 2017 முதல் கேப்டனாகவும் செயல்பட்டு வந்த அவர் எடுத்துக் கொண்ட அத்தனை வேலைகளிலும் சிறப்பாக செயல்பட்டதால் ஏற்பட்ட பணிச்சுமை அவரது மிகப்பெரிய கேரியரில் 3 வருடங்களாக சதமடிக்க விடாமல் மெகா வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கமான தரம்:
மேலும் இடையிடையே 50, 70 போன்ற நல்ல ரன்களை அடித்து வரும் அவரை சதமடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அனைவரும் பார்ம் அவுட் என்று முத்திரை குத்துகிறார்கள். ஆரம்ப காலங்களில் களமிறங்கினாலே சதமடிப்பார் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு அனைவரின் மனதில் ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்தி தனக்கென்ற ஒரு தங்கமான தரத்தை அவர் உருவாக்கி வைத்துள்ளதே இந்த விமர்சனங்களுக்கு முக்கிய காரணமாகும். அப்படிப்பட்ட அவரின் தரத்தை உணர்ந்த ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா போன்ற ஏராளமான வெளிநாட்டு முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

kohli

அந்த வரிசையில் இணைந்துள்ள ஆப்கானிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் ரஷீத் கான் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரின் போது ஒரு போட்டியில் தங்களுடைய பயிற்சி முடிந்த பின்பும் கடுமையாக பயிற்சி எடுத்த விராட் கோலியை பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும் அடுத்த நாளே 70 ரன்கள் குவித்ததாகவும் அவரின் திறமையை பார்த்து வியந்துள்ளார். அத்துடன் விராட் கோலி பார்ம் அவுட் கிடையாது ஒவ்வொரு போட்டியிலும் அவர் சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்ப்பதே பார்ம் அவுட்டாகி விட்டார் என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 பவுலராக போற்றப்படும் ரசித் கான் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரின் போது அடுத்த நாளில் எங்களுக்கு பெங்களூருவுக்கு எதிரான போட்டி இருந்தது. அதற்காக முதல் நாள் நாங்கள் பயிற்சி எடுக்க சென்றபோது விராட் கோலி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் எங்களுடைய பயிற்சி முடிந்த பின்பும் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக அவர் பயிற்சி எடுத்ததை பார்த்து நான் வியந்து போனேன். அடுத்த நாளே அவர் 70 ரன்கள் விளாசினார். அந்த வகையில் அவர் விளையாடும் போது அடிக்கும் ஷாட்களை பார்க்கும் எனக்கு அவர் பார்ம் அவுட்டாகி விட்டதாக தோன்றவில்லை”

“அவர் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் அவர் சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அவருடைய சமீபத்திய டெஸ்ட் இன்னிங்ஸ்களை நீங்கள் பார்த்தால் இந்த மோசமான தருணங்களிலும் 50, 60, 70 போன்ற ரன்களை அவ்வப்போது எடுத்து வருகிறார். அவரது இடத்தில் வேறு யாராவது இருந்தால் நல்ல பார்மில் இருக்கிறார் என்றுதான் அனைவரும் கூறுவார்கள். அவர் மீது எதிர்பார்ப்புகள் ஏராளமாக இருப்பதால் ஒவ்வொரு போட்டியிலும் சதமடிக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்”

“அவரை நேரில் சந்தித்துப் பேசும் போதெல்லாம் இந்த விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதில்லை என்று அவர் என்னிடம் கூறியுள்ளார். அந்த வகையில் எங்களைப் போன்றவர்களுக்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். உங்களது கேரியரில் சில தருணங்களில் எவ்வளவு முயற்சித்தாலும் சிலவற்றை தவிர்க்க முடியாது. அவரின் ரசிகராக அவர் சதமடிக்க வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன்” எனக் கூறினார்.

Kohli

அவர் கூறும் அந்த போட்டியில் நிச்சயம் வென்றே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் குஜராத் நிர்ணயித்த 169 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு 8 பவுண்டரி 2 சிக்சருடன் 73 (54) ரன்கள் குவித்த விராட் கோலி வெற்றி பெற வைத்து தனது தரத்தை நிரூபித்தார். அத்துடன் பார்ம் அவுட்டாகி விட்டார் என்று அனைவரும் கருதும் 2019க்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இப்போதும் விராட் கோலி இருக்கிறார் என்பதே அவரின் தரத்துக்கு சான்றாகும்.

Advertisement