- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஃபேப் 4இல் விராட் கோலி தான் அதுல அழுத்தத்தை தாங்கி தனியாளா ஜெய்ச்சு கொடுக்குறாரு.. தமீம் இக்பால்

நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்து ஜோ ரூட் ஆகியோர் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனால் அவர்களை ஃபேப் 4 பேட்ஸ்மேன்கள் என்று வல்லுனர்களும் ரசிகர்களும் அழைப்பது வழக்கமாகும். அந்த மூவரில் தற்போது ஜோ ரூட் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி முதல் ஆளாக 10000 ரன்களை கடந்துள்ளார்.

அதனால் விராட் கோலியை விட ஜோ ரூட் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் ஃபேப் 4 பேட்ஸ்மேன்களின் மற்ற 3 பேர் விராட் கோலி தாக்கத்தை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அளவுக்கு ஏற்படுத்தவில்லை என முன்னாள் வங்கதேச வீரர் தமீம் இக்பால் தெரிவித்துள்ளார். மறுபுறம் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் விராட் கோலி மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

கிங் விராட் கோலி:

ஆனால் அந்த எதிர்பார்ப்பு மற்றும் அழுத்தத்திற்கு மத்தியிலும் விராட் கோலி சிறப்பாக விளையாடி பலமுறை இந்தியாவுக்கு தனியாளாக வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் தமீம் இக்பால் பாராட்டியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபேப் 4 பேட்ஸ்மேன்கள் அற்புதங்கள் செய்வது பற்றி நாம் பேசுகிறோம்”

“டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனாக நீங்கள் தனி ஒருவனாக வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது. ஏனெனில் அங்கே ஒரு போட்டியில் 2 இன்னிங்ஸ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட் என்று வரும் போது அவர்களின் கைகள் கீழே செல்கிறது. இருப்பினும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் விராட் கோலி இந்தியாவுக்காக பல போட்டிகளில் தனியாளாக வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்”

- Advertisement -

ஆல் ஃபார்மட் நாயகன்:

“ஆனால் அவரைத் தவிர்த்து மற்ற 3 பேட்ஸ்மேன்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அந்தளவுக்கு நிறைய போட்டிகளை வென்று கொடுக்கவில்லை என்று நான் உறுதியாக சொல்வேன். எனவே விராட் கோலி சந்திக்கும் அழுத்தத்தை மற்ற 3 பேட்ஸ்மேன்கள் சந்திப்பதில்லை” என்று கூறினார். அவர் கூறுவது போல ஜோ ரூட், ஸ்மித், வில்லியம்சன் ஆகியோர் விராட் கோலி அளவுக்கு டி20 கிரிக்கெட்டில் அசத்தியதில்லை.

இதையும் படிங்க: நான் இல்லனாலும் பரவாயில்லை.. பதிரானா இருக்குனும்.. சி.எஸ்.கே அணியக்கு தோனி – போட்ட கண்டிஷன்

அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 12000க்கும் மேற்பட்ட ரன்களும் 50 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் மற்ற 3 பேட்ஸ்மேன்களும் சேர்ந்து 46 சதங்கள் மட்டுமே அடித்துள்ளனர். யாரும் இதுவரை 10,000 ரன்கள் கூட அடித்ததில்லை. அந்த வகையில் மற்ற 3 பேட்ஸ்மேன்களை விட விராட் கோலி அதிகப்படியான அழுத்தங்களை சந்தித்து ஆல் ஃபார்மட் கிரிக்கெட் நாயகனாக அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -