இந்திய அணி தேர்வு இன்னைக்கு வித்தியாசமாக இருக்கும். யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டீங்க – விமர்சையாக பேசிய கோலி

kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இன்று (22 ஆம் தேதி) இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

kohli

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியுடனான வரலாற்று வெற்றிக்குப் பிறகு ஏழு மாதங்களுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்திய அணி இன்றைய போட்டியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்துவீச்சாளர் களமிறங்க உள்ளது. வேகப்பந்துவீச்சாளர்களாக இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் அல்லது பும்ரா, சுழற்பந்து வீச்சாளராக ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் உடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

kohli

இந்த போட்டியுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆரம்பிக்க உள்ளதால் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டி ஆகும். இந்த போட்டியை வெற்றியுடன் ஆரம்பிக்க கோலி அதிரடியான முடிவுகளை எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement