கோலியை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்டீவ்வாக்..! என்ன சொன்னார் தெரியுமா?

stev
- Advertisement -

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்பட்டு வருகிறார். தனது அற்புதமான பேட்டிங் திறமையால் இளம் வயதிலேயே பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் கோலி. இந்நிலையில் கோலியை பல முன்னாள் ஜாம்பவங்களுடன் ஒப்பிட்டு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் வாக் புகழாறம் சூட்டியுள்ளார்.

steve wau

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் வாக், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்து வந்தார்.இதுவரை 168 டெஸ்ட் மற்றும் 325 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஸ்டீவ் வாக், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் செயல்ப்பட்டுள்ளார். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது உலக கோப்பையை கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவானாக கருதப்படும் ஸ்டீவ் வாக் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்கையில் விராட் கோலி குறித்து தெரிவித்த போது “இந்திய அணியின் வீரரான கோலி சிறப்பான பேட்டிங் நுணுக்கத்தை கொண்டுள்ளார். அவரை கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜம்பங்களான பிரையன் லாரா மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்களுடன் ஒப்பிடுகையில் கோலியிடன் சிறந்த பேட்ஸ்மேனிற்கான அணைத்து பண்புகளும் உள்ளது.

steve waugh

உலக கிரிக்கெட்டில் அணைத்து மைதானத்திலும் சிறப்பாக விளையாடும் திறமையை கோலி மட்டுமே பெற்றுள்ளார் என்று நான் நினைக்கிறேன். கோலியும், ஏ பி டிவில்லியர்ஸும் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த திறமை கொண்ட வீரர்களாக இருக்கின்றனர். ஆனால், டிவில்லியர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒவ்யு பெற்றுள்ளதால் கோலியின் திறமை தற்போது தனித்து தெரிகிறது” என்று ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

Advertisement