சென்னை 2 ஆவது டெஸ்ட் : டக் ஆனதன் மூலம் மோசமான சாதனையை படைத்த விராட் கோலி – விவரம் இதோ

kohli 5
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று 13-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை குவித்துள்ளது. துவக்க வீரர் ரோகித் சர்மா அதிகபட்சமாக 161 ரன்களையும், ரகானே 67 ரன்களும் குவித்தனர். ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 33 ரன்களுடனும், அக்ஷர் பட்டேல் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

rohith 1

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய துவக்க வீரர்களான சுப்மன் கில் மூன்று பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ரோகித் சர்மாவுடன் இணைந்த புஜாரா சிறிது பொறுமையாக விளையாடி வந்தாலும் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதனை தொடர்ந்து கடந்த சில போட்டிகளாக பெரிய அளவில் ரன்களை குவிக்காமல் இருந்த கோலி இம்முறை நிச்சயம் பெரிய ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொயின் அலி பந்து வீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரின் இந்த விக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

kohli

ஏனெனில் சென்னை டெஸ்டில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட முதல் போட்டியான இன்று அவர்களிடையே விராட் கோலி மிகப்பெரிய சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரது இந்த விக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது முறையாக கோலி டக் அவுட் ஆகி உள்ளார்.

kohli 1

அதுமட்டுமின்றி முதல் முறையாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஒருவரிடம் கோலி டக் அவுட்டாகி வினோதமான சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இன்றைய இன்னிங்ஸ் கோலியின் 150 ஆவது இன்னிங்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement