இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி (0-2) என்ற கணக்கில் இழந்தது.
இந்த தோல்வியின் மூலம் கடந்த 27 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த சாதனையை இந்திய அணி நழுவ விட்டது. அதாவது கடந்த 1997-ஆம் ஆண்டு தான் கடைசியாக இந்திய அணி இலங்கை அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது 27 ஆண்டுகள் கழித்து தற்போது இந்திய அணி இலங்கை அணியிடம் ஒருநாள் தொடரில் தோல்வியை தழுவியுள்ளது.
இந்நிலையில் இந்த ஒருநாள் தொடர் முடிவடைந்த கையோடு இலங்கை வீரர் குசால் மெண்டிஸ்க்கு இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது கையொப்பமிட்ட ஜெர்சியை வழங்கி அவரை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளார்.
உலகில் உள்ள பல்வேறு இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் விராட் கோலி களத்தில் என்னதான் ஆக்ரோஷமாக இருந்தாலும் வீரர்களை ஆதரிக்க என்றுமே தவறியதில்லை. அந்த வகையில் ஏற்கனவே ஸ்மித், நவீன் உல் ஹக், ஹார்திக் பாண்டியா ஆகியோருக்கு களத்தில் இருந்த படியே கோலி ஆதரித்து இருக்கிறார்.
மேலும் எந்த வெளிநாட்டிற்கு சென்று விளையாடினாலும் அங்கு தன்னை முன்மாதிரியாக நினைத்து சிறப்பாக விளையாடும் வீரர்களையும் அவர் நேரில் அழைத்து தனது கையொப்பமிட்ட ஜெர்சியை வழங்கி சிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க : கில், ஸ்ரேயாஸை விட 1000 மடங்கு பெஸ்ட்.. அந்த 2 பேரை செலக்ட் பண்ணாம தப்பு பண்ணிடீங்க.. பசித் அலி
அந்தவகையில் தற்போது இந்திய அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் நட்சத்திர வீரரான குசால் மெண்டிஸ்க்கு அவர் இந்த நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்துள்ளார். விராட் கோலி செய்த இந்த செயல் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.



