கோலியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக சம்மதம் தெரிவித்த பி.சி.சி.ஐ – லீவு ஓகே ஆயிடிச்சி

Kohli

இந்த ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலையில் துபாயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என ஏற்கனவே பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

INDvsAUS

இந்த தொடரானது நவம்பர் 27ஆம் தேதி துவங்கி ஜனவரி மாதம் பாதியில் முடிவடைகிறது. இந்த தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் விராட் கோலி பங்கேற்பது சந்தேகம் என எனவும் அவர் விளையாட மாட்டார் எனவும் ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

அதற்கு காரணம் யாதெனில் அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி தம்பதிக்கு ஜனவரி மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாதம் துவக்கத்திலோ குழந்தை பிறக்க இருக்கிறது இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனவும் கூறப்பட்டது.

Anushka

பிரசவத்தின் போது தனது மனைவியுடன் இருக்க வேண்டும் என விராட் கோலி பிசிசிஐ யிடம் கோரிக்கை வைத்திருப்பதன் காரணமாக அவர் பிரசவத்தின் போது அவரது மனைவியுடன் இருப்பார் என்று தெரிகிறது. இதன் காரணமாக அவர் கடைசி 2 டெஸ்ட் ,போட்டிகளில் விளையாட மாட்டார் எனக் கூறப்பட்டது.

- Advertisement -

Kohli

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டிக்குப் பின்னர் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் கோலி விளையாட மாட்டார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் கோலி வைத்த வேண்டுகோளுக்கு இணங்க அவருக்கு முதல் போட்டியை தவிர்த்து மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கும் விடுமுறை அளித்து அவர் இந்தியா திரும்புவார் எனவும் பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் யார் என்பது விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.