இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் முடிவில் 244 ரன்களை குவிக்க அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை இன்று விளையாட ஆரம்பித்தது. துவக்கம் முதலே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் சிக்கி தவித்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ரன் குவிக்க திணறினர்.

துவக்க வீரர்களான மேத்யூ வேட் மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகியோர் முறையே 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க அடுத்து அந்த அணியின் நட்சத்திர வீரர்களான லாபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இணைந்தனர். இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு எதிராக பெரிய ரன் குவிப்பை தருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அஷ்வினின் சூழலில் சிக்கி ஸ்மித் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆனால் லாபுஷேன் மட்டும் இந்திய வீரர்கள் தவறவிட்ட மூன்று கேட்சிகளின் மூலம் 47 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் டிராவிஸ் ஹெட் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து படு பாதாளத்திற்கு சென்றது. அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் மட்டும் தட்டுத்தடுமாறி 73 ரன்கள் அடித்து அந்த அணியை கௌரவமான ரன்களை குவிக்க உயர்த்தினார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 72.1 ஓவர்களில் 191 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 53 ரன்கள் முன்னிலை பெற்று தற்போது 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணியின் இளம் அறிமுக வீரரான கேமரூன் க்ரீன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது விராத் கோலிக்கு பிடித்த கேட்ச் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Cameron Green’s debut innings was stopped short by an absolute classic from Virat Kohli – and the Indian captain enjoyed it a lot! #OhWhatAFeeling@toyota_Aus | #AUSvIND pic.twitter.com/krXXaZI1at
— cricket.com.au (@cricketcomau) December 18, 2020
அதன்படி 24 பந்துகளை சந்தித்த கிரீன் ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் அடித்தார். அஸ்வின் வீசிய பந்தை தூக்கி லெக் சைடில் அடித்த அவர் பந்து பவுண்டரி செல்லும் என்று எதிர்பார்த்தார். ஆனால் லெக் சைடில் நின்று இருந்த கேப்டன் கோலி அதை அற்புதமாக காற்றில் பறந்து சிறப்பாக கேட்ச் பிடித்தார். அவர் பிடித்த கேட்ச் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமின்றி ரசிகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



