ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட மறுத்த தோனி ..! – வைரல் வீடியோ

Advertisement

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகளில் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 கணக்கில் தோல்வியடைந்து. இந்த தொடரின் மூன்றாவது போட்டியின் முன்பு இந்திய அணியின் கேப்டன் கோலி ரசிகைக்காக செய்த காரியம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
kholi
இங்கிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையேயான மூன்றாவது போட்டியின் போது இந்திய அணி வீரர்ககள் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து ஆடுகளத்திற்கு சென்று கொண்டிருந்தனர். வீரர்களை காண ஹோட்டலுக்கு வெளியே பல ரசிகர்கள் குவிந்திருந்தனர்.மேலும் , வீரர்கள் அருகில் ரசிகர்கள் நெருங்கவிடாமல் இருக்க பாதுகாப்பு பணியில் சிலர் ஈடுபட்டு இருந்தனர்.

இந்திய வீரர்கள் ஒவ்வொருவராக ஓட்டலில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்த போது ரசிகை ஒருவர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தவர்களையும் மீறி கிரிக்கெட் வீரர்களிடம் ஆட்டோகிராப் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது தோனியிடம் ஆட்டோகிராப் கேட்ட போது அவர் முடியாது என்பது போல செய்கை செய்துவிட்டு சென்றுள்ளார்.

- Advertisement -

அவருக்கு பின்னர் வந்த அணைத்து வீரர்களும் அந்த ரசிகைக்கு ஆட்டோகிராப் போடாமல் சென்று விட்டனர். பின்னர், ஓட்டலில் இருந்து வெளியே வந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் அந்த ரசிகை ஆட்டோகிராப் கேட்ட போது அவர், நின்று அந்த ரசிகைக்கு ஆட்டோகிராப் போட்டுவிட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ பதிவை பிசிசிஐ நிர்வாகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Advertisement