- Advertisement -
ஐ.பி.எல்

எனக்கு வெறும் 6 நாட்கள் ஆன மாதிரி தான் இருக்கு. உற்சாகத்தில் கோலி – வைரலாகும் பதிவு

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இத்தொடரில் பங்கேற்பதற்காக 8 அணிகளும் துபாய் சென்று விட்டன. கொரோனா விதிகளின்படி அனைத்து வீரர்களும், அதிகாரிகளும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தி அதற்கு பிறகு தற்போதைய பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .

- Advertisement -

மேலும் அடுத்தகட்ட பரிசோதனைக்கும் அவர்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர். சிஎஸ்கே அணியை தவிர்த்து மற்ற அணி வீரர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தல் முடிந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சிஎஸ்கே அணி மட்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை தனிமைபடுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வீரர்களுக்கும் நெகட்டிவ் என்ற சோதனை முடிவு பெற்ற பின் ஒரு வாரத்துக்குப் பிறகு விளையாட அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் ஆர்சிபி அணியில் இந்த தனிமைப் படுத்துதல் காலம் முடிவடைந்து விட்டது. அவர்கள் தற்போது மைதானத்தில் பயிற்சியை துவங்கியுள்ளனர். வீரர்கள் அனைவரும் ஒன்றாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் : மைதானத்தில் களமிறங்கி ஐந்து மாதங்கள் ஆகிறது. ஆனால் இப்போது நான் வளையப்பயிற்சி செய்யும் போது ஆறு நாட்கள் ஆனது போலவே உணர்கிறேன். சக வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு மகிழ்ச்சி பதிவிட்டுள்ளார். கோலியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by