- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித்திடம் வேணாம்ன்னு சொன்னேன்.. ஃபைனலில் அசத்தியது எப்படி? என்ற மோடியின் கேள்விக்கு விராட் கோலி பதில்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜூலை 4ஆம் தேதி மும்பையில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றதால் மும்பை கடற்கரை சாலையில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று சேர்ந்து இந்திய அணியை வரவேற்றனர். அங்கே திறந்த வெளி பேருந்தில் வந்த இந்திய அணியினர் ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாடினார்.

அங்கிருந்து மும்பை வான்கடே மைதானத்திற்கு சென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பில் வரவேற்பும் 125 கோடி ரூபாய் பரிசு தொகையும் கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்வுகளுக்கு முன்பாக நாடு திரும்பியதும் பிரதமர் நரேந்திர மோடியை இந்திய அணியினர் சந்தித்தனர். அப்போது ஃபைனலில் அசத்தியது பற்றி விராட் கோலியிடம் பிரதமர் கேட்டார்.

- Advertisement -

மோடியுடன் விராட் கோலி:
ஏனெனில் அத்தொடரில் முதல் 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்த விராட் கோலி சுமாரான ஃபார்மில் இருந்தார். ஆனால் மாபெரும் இறுதிப் போட்டியில் 34/3 என தடுமாறிய போது நங்கூரமாக விளையாடி 76 ரன்கள் குவித்த விராட் கோலி இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அது பற்றி “விராட் இம்முறை இருந்த முழுமையான மேடு பள்ளங்களை பற்றி சொல்லுங்கள்” என்று பிரதமர் மோடி கேட்டார்.

அப்போது ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்ததால் ஓப்பனிங்கில் விளையாட வேண்டாம் என்று ரோஹித், டிராவிட்டிடம் சொன்னதாக விராட் கோலி தெரிவித்தார். ஆனால் அவர்களுடைய ஆதரவுடன் ஃபைனலில் அசத்தியதாக தெரிவிக்கும் விராட் கோலி இது பற்றி பேசியது பின்வருமாறு. “எங்கள் அனைவரையும் இங்கே அழைத்ததற்கு நன்றி. இந்த தருணத்தை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். அத்தொடரில் நான் விரும்பியது போல் அணிக்கு பங்காற்ற முடியவில்லை. அதனால் எனக்கும் அணிக்கும் நியாயமாக இருக்க முடியவில்லை என்று ராகுல் டிராவிட்டிடம் ஒரு கட்டத்தில் சொன்னேன்”

- Advertisement -

“அப்போது நம்பிக்கை வையுங்கள் நேரம் வரும் போது அசத்துவீர்கள் என்று அவர் என்னிடம் சொன்னார். அதே போல ஃபைனலுக்கு முன்பாக எனக்கு நம்பிக்கை இல்லை என்று ரோகித் சர்மாவிடமும் சொன்னேன். ஆனால் முதல் பந்தை எதிர்கொண்டதும் “ரன்கள் அடிக்க முடியவில்லை என்று நினைத்த எனக்கு இன்று எல்லாம் ஒன்றாக சேர்ந்து வருகிறதே” என்று ரோகித் சர்மாவிடம் சொன்னேன். குறிப்பாக ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால் நான் என்னுடைய அணிக்காக சரணடைய விரும்பினேன்”

இதையும் படிங்க: கோப்பையை வித்யாசமாக சென்று வாங்கியது ஏன்? பிரதமர் மோடியிடம் ஸ்வாரஸ்யத்தை விளக்கிய ரோஹித் சர்மா

“அப்படி கவனம் செலுத்திய நான் ஒரு கட்டத்தில் என்ன நடக்குமோ அது நடக்கும் என்று நினைத்து விளையாடினேன். இந்த வெற்றி எனக்கும் அணிக்கும் கிடைக்கும் என்று நான் உணர்ந்தேன். போட்டி முடியும் தருணத்தில் கூட ஒவ்வொரு பந்திலும் வாழ்ந்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் வெற்றி பறிபோனது போல் தெரிந்தது. இருப்பினும் பாண்டியா விக்கெட் எடுத்ததும் நாங்கள் ஒவ்வொரு பந்திலும் கம்பேக் கொடுத்தோம்” என்று கூறினார்.

- Advertisement -