மீண்டும் டி20 தரவரிசையில் முன்னேற்றம் கண்ட கிங் கோலி – ஐ.சி.சி வெளியிட்ட தரவரிசை பட்டியல்

Kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி அவ்வப்போது சர்வதேச அளவில் நடைபெற்று முடியும் தொடர்களின் அடிப்படையில் அனைத்து வகையான கிரிக்கெட்க்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வரும் வேளையில் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் முதல் போட்டியில் ரன்கள் குவிக்க தவறினாலும், அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் 73 ரன்கள் மற்றும் 77 ரன்கள் என நாட் அவுட்டாக அசத்தியுள்ளார். இதன் காரணமாக தற்போது வெளியாகியுள்ள ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் விராட் கோலி மீண்டும் முன்னேற்றம் கண்டுள்ளார்.

கடந்த போட்டியில் 77 ரன்கள் குவித்த கோலி அதற்கு முன்னர் நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் 73 ரன்கள் என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோலி 47 புள்ளிகளை அதிகமாக பெற்று தற்போது டாப்-5க்குள் வந்துள்ளார். டி20 தரவரிசையில் 5-வது இடத்தை பிடித்துள்ள கோலி 744 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு முன்னதாக இந்திய அணியின் துவக்க வீரரான ராகுல் 771 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். அதே வேளையில் இந்த தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரரான டேவிட் மலான் 894 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. விராத் கோலிக்கும் மேல் இடத்தில் இருக்கும் ராகுல் ஏற்கனவே இது தொடர ஆரம்பிக்கும் முன்னர் மூன்றாவது இடத்தில் இருந்தார்.

rahul

ஆனால் தற்போது இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் ஒரு ரன் மட்டுமே குவித்த அவர் ஓர் இடம் பின்தங்கி நான்காவது இடத்திலும், கோலி ஒரு இடம் முன்னேறி 5வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement