தமிழக வீரர்களான இவர்களில் இருவரில் ஒருவருக்கே வாய்ப்பு – தெளிவான விளக்கம் கொடுத்த கேப்டன் கோலி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில் இந்த தொடருக்கு பின்னர் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெறுவதாலும் அதன் பின்னர் உலக கோப்பை டி20 தொடர் இந்தியாவில் நடைபெறுவதாலும் இந்திய வீரர்களின் செயல்பாடு குறிப்பாக கவனிக்கப்பட உள்ளது.

INDvsENG

- Advertisement -

எனவே இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களை வைத்து தான் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்த தொடருக்கு முன்னதாக பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பிளேயிங் லெவனில் விளையாடும் வீரர்கள் குறித்து பேசினார். அதில் அஸ்வின் மற்றும் சுந்தர் ஆகிய இருவருக்கும் அணியில் வாய்ப்பு கிடைக்குமா ? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் : வாஷிங்டன் சுந்தர் சமீபகாலமாகவே சிறப்பாக விளையாடி வருகிறார். அஸ்வினும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக தான் விளையாடி வருகிறார். இருப்பினும் டி20 அணியில் இருவரையும் ஒரே சமயத்தில் களமிறக்க முடியாது. இருவருக்கும் ஏன் வாய்ப்பு கொடுக்க முடியாது என்று நீங்கள் சுலபமாக கேட்டு விடலாம். ஆனால் அணியின் பக்கம் நின்று யோசித்தால் தான் அதற்கான விடை கிடைக்கும்.

sundar 1

அஸ்வின் கடைசியாக 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 அணியில் விளையாடி இருந்தார். ஆனால் அதன்பிறகு அவர் விளையாடவில்லை. வாஷிங்டன் கடந்த சில வருடங்களாகவே பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இதுவரை 21 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13 பவர்பிளே விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் காரணமாக சுந்தர் இடம் பெறுவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது என்று திட்டவட்டமாக தனது முடிவை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் அஸ்வினுக்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் கிடைக்காதது குறித்து சமீபத்தில் பேசிய கம்பீர் : அஸ்வின் சிறந்த பவுலர் என்று அனைவரும் பேசுகின்றனர். ஆனால் அவருடைய பேட்டிங் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. டெஸ்ட் போட்டியில் பல முறை தொடர் நாயகன் விருது வாங்கிய ஒருவருக்கு இது போன்று அணியில் வாய்ப்பு மறுக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

Sundar 2

இருப்பினும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்திய அணியின் நிர்வாகம் இளம் வீரரான சுந்தருக்கு தொடர்ந்து வாய்ப்புகளைக் கொடுத்து அவரை மெருகேற்றி வருகிறது. இதனால் இந்த டி20 தொடரிலும் வாஷிங்டன் சுந்தர் தான் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடிப்பார் என்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement