அப்பாடா ஒருவழியா கோலி அப்பா ஆயிட்டாரு. குழந்தை பிறக்கும் தேதியையும் சொல்லிட்டாரு – வைரலாகும் புகைப்படம்

anushka

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி இத்தாலியில் தங்களது திருமணத்தை செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் அவருக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில நண்பர்கள் மட்டும் என வெகுசிலரே பங்கேற்றனர்.

Anushka-1

அதனைத்தொடர்ந்து தற்போது வரை தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வரும் கோலி இந்திய அணி எங்கு சென்றாலும் அவரது மனைவி அனுஷ்காவை அவர் உடனே அழைத்துச் செல்வார் மேலும் இவர்கள் இருவரும் மூன்று ஆண்டுகளாக உலகம் சுற்றும் காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். அவ்வப்போது அவர்கள் வெளிநாடுகளில் எடுக்கும் புகைப்படங்களை பதிவிடும் வழக்கத்தையும் வைத்துள்ளனர்.

அப்படி அவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் ஹிட்டடிக்க தவறியதில்லை அந்த வகையில் தற்போது கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக வீட்டில் இருக்கும் விராட் கோலியின் சில புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியது.

 

View this post on Instagram

 

And then, we were three! Arriving Jan 2021 ❤️🙏

A post shared by Virat Kohli (@virat.kohli) on

இந்நிலையில் தற்போது தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தி ஒரு புகைப்படத்தினை கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நாங்கள் இனி மூவராக மாற இருக்கிறோம். ஜனவரி மாதம் 2021 ஆம் ஆண்டு புதிய நபர் வருகை தருகிறார் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அவரின் இந்த பதிவிற்கு தற்போது லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமின்றி கோலி அப்பா ஆக போகிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டு இந்த புகைப்படத்தையும் அதிக அளவில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது