என்னது ஒரு போஸ்டுக்கு 11.45 கோடி ரூபாய் நான் வாங்குறேனா? வைரலாக பரவும் செய்திக்கு – பதிலளித்த விராட் கோலி

Virat-Kohli
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளத்தில் அதிகளவு பகிரப்பட்டு வரும் செய்தியாக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் வருமானம் குறித்த தகவலே காணப்படுகிறது. ஏனெனில் அண்மையில் பிரபல தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி இன்ஸ்டாகிராம் மூலம் அதிக சம்பளம் பெறும் முதல் 100 பேரில் 14-வது இடத்தை விராட் கோலி பிடித்துள்ளார் என்ற தகவலை வெளியிட்டு இருந்தது.

அதோடு இந்த தகவலின் படி உலகளவில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் முதல் நபராக ரொனால்டோ ஒரு பதிவிற்கு 26 கோடி ரூபாய் வாங்குகிறார் என்றும், அவருக்கு அடுத்து லியானல் மெஸ்ஸி ஒரு பதிவிற்கு 21 கோடி ரூபாய் வாங்குகிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்த பட்டியலில் 14-வது இடத்தில் இருக்கும் இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான விராட் கோலி ஒரு பதிவிற்கு இந்திய மதிப்பில் சுமார் 11 கோடியே 45 லட்சம் வருமானம் ஈட்டுகிறார் என்று தெரிவித்தது. இப்படி சமூக வலைதளம் மூலம் அதிகளவில் விராட் கோலி கோடிகளை பெற்று வருவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதோடு இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் ஒரு பதிவிற்கு இவ்வளவு தொகையை விராட் கோலி பெறுகிறாரா? என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இப்படி ஒரு தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் வேளையில் இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விராட் கோலி தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் குறிப்பிட்டதாவது : நான் பெரும் அனைத்திற்கும் நன்றியுள்ளனாகவும், கடமைப்பட்டவனாகவும் இருக்கிறேன். சமூக வலைதளம் மூலம் நான் பெரும் வருமானம் குறித்து பரவிவரும் செய்திகள் உண்மையல்ல என்று இந்த வதந்திகளுக்கு விராட் கோலி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியா தங்களையே அழிச்சுக்குறாங்க, செட்டிலான பாகிஸ்தான் ஜெயிப்பது உறுதி – 2023 உ.கோ பற்றி முன்னாள் பாக் வீரர் அதிரடி பேட்டி

என்னதான் விராட் கோலி சமூக வலைதளம் மூலம் இவ்வளவு கோடிகளை சம்பாதிக்கவில்லை என்று கூறினாலும் கிரிக்கெட் ஒப்பந்தம் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் ஈட்டி வருகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement