சொந்த மண்ணில் விளையாடும் போது எப்போதுமே அழுத்தம் அதிகமாக இருக்கும். பாகிஸ்தான் அணிக்கு வெற்றி உறுதி – 2023 உ.கோ பற்றி முன்னாள் பாக் வீரர் அதிரடி பேட்டி

Sarfraz Nawas
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உள்ளிட்ட எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு நிகராக அக்டோபர் 14ஆம் தேதி பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெறும் முக்கியமான போட்டியில் வென்று காலம் காலமாக வைத்துள்ள கௌரவத்தை இந்தியா காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

மறுபுறம் 1992 முதல் கடந்த 30 வருடங்களாக 50 ஓவர் உலகக் கோப்பை சந்தித்த 7 போட்டிகளிலும் சந்தித்த தோல்விகளுக்கு உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை இம்முறை இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்த்து பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பாகிஸ்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் இந்த 2 அணிகளை பொறுத்த வரை பாகிஸ்தான் மிகவும் செட்டிலான அணியாக இருப்பதால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து முதல் முறையாக வெற்றி வாகை சூடும் என்று 45 ஒருநாள் மற்றும் 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர் சர்பராஸ் நவாஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

அழித்துக்கொள்ளும் இந்தியா:
மறுபுறம் அணியை உருவாக்காமல் ஏற்கனவே இருக்கும் அணியை அழிக்கும் வகையில் இந்திய அணி நிர்வாகம் செயல்படுவதால் இம்முறை உலகக் கோப்பையில் தோற்கும் என்றும் அவர் அதிரடியாக பேசியுள்ளார். அதாவது அடிக்கடி கேப்டன்களை மாற்றுவது 2 மாதங்கள் கூட இல்லாத நிலைமையில் சோதனை என்ற பெயரில் தேவையற்ற மாற்றங்கள் செய்வது போன்றவைகளால் இந்திய அணி செட்டிலாகாமல் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இதை பயன்படுத்தி பாகிஸ்தான் வெல்லும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆசிய மற்றும் உலகக் கோப்பை பொறுத்த வரை இந்தியாவுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் அதிகமாக செட்டிலாகியுள்ள அணியாக இருக்கிறது. உலக கோப்பை போன்ற இந்த பெரிய தொடருக்கு தேவையான கலவையை இன்னும் இந்தியர்கள் உருவாக்காமல் இருக்கிறார்கள். குறிப்பாக கேப்டன்கள் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள். புதிய வீரர்கள் அடிக்கடி சோதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களிடம் சரியான அணியும் கலவையும் இல்லை”

- Advertisement -

“இதன் காரணமாக இந்தியா தங்களுடைய அணியை உருவாக்குவதற்கு பதிலாக அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் உணர்கிறேன். இது போக சொந்த மண்ணில் விளையாடும் போது எப்போதுமே அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்திய அணியில் இருக்கும் ஒரே நல்ல அம்சம் என்னவெனில் அவர்களிடம் நல்ல சீனியர் வீரர்கள் இருக்கின்றனர்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்தும் இதுவரை 4வது பேட்டிங் இடத்திற்கு விளையாடத் தகுந்த போதுமான வீரர்களை இந்தியா இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

அதே போல ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல் போன்ற முதன்மை வீரர்கள் காயமடைந்திருப்பது இந்தியாவுக்கு பின்னடைவாக இருக்கிறது. அது போக யுவராஜ் சிங், கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா போல தற்போதைய இந்திய அணியில் டாப் 6 பேட்ஸ்மேன்களில் யாருமே இடதுகை வீரர்கள் இல்லை. மேலும் சிறப்பாக செயல்படும் வீரர்களையும் ராகுல் டிராவிட் சோதனை என்ற பெயரில் கழற்றி விட்டு அணியை சீர்குலைத்து வைத்துள்ளார் என்றால் மிகையாகாது.

இதையும் படிங்க:கேப்டன் பதவியில் இருந்து நீக்கம். அணியில் இருந்து வெளியேற நோ அப்ஜக்சன் சர்டிபிகேட் கேட்ட நிதீஷ் ராணா – என்ன நடந்தது?

அதே சமயம் பாகிஸ்தான் அணியின் கருப்பு குதிரையாக கருதப்படும் சாஹின் அப்ரிடி பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அபாரமான பவுலரான அவர் முதல் 2 – 3 ஓவர்களில் மிகவும் அபாயகரமானவர். புதிய பந்தில் வேகம், ஸ்விங், யார்கர், கட்டுப்பாடு போன்றவற்றைக் கொண்டுள்ள அவரைப் போன்ற பவுலரை நான் அரிதாகவே பார்த்துள்ளேன்” என்று கூறினார். அப்படி நிறைய பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் நிச்சயம் தோற்கடிப்போம் என்று சொல்லி வரும் நிலையில் இந்தியா அதற்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement