டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசையை மாற்ற இருக்கும் விராட் கோலி – 4 ஆவது இடத்தில் ஆடப்போவது இவர்தான்

kohli
- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய அணியின் மீதும், கேப்டன் விராட் கோஹ்லியின் மீதும் இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்ச்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதன் எதிரொலி காரணமாகவும் இந்திய அணியின் நலன் கருதியும் விராட் கோஹ்லி தனது பேட்டிங் ஆர்டரை மாற்றிக் கொள்ளவிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. கடந்த ஒன்றரை வருடமாகவே அவர் சதமடிக்கவில்லை என்ற விமர்ச்சனத்தையும் இந்த முடிவின் மூலமாக அவர் சரிசெய்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் எளிதாக ட்ரா செய்ய அனைத்து வாய்ப்புகள் இருந்தபோதும், படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்வியை தழுவியிருக்கிறது இந்திய அணி. குறிப்பாக ஒன்டவுன் பேட்ஸ்மேனாக விளையாடும் சேட்டேஸ்வர் புஜாரா கடந்த இரண்டு வருடங்களாகவே ரன் குவிக்க தவறி வருகிறார். இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் அவரை, அணியில் இருந்து நீக்கிவிட்டு, ஏற்கனவே ஒரு நாள் போட்டிகளில் ஒன் டவுன் ஆர்டரில் களமிறங்கி வரும் விராட் கோஹ்லி, இனிமேல் டெஸ்ட் போட்டிகளிலும் அதே ஆர்டரில் களமிறங்க முடிவு செய்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

தற்போது வரை நான்காவது இடத்தில் விளையாடி வரும் அவர், ஒன் டவுன் ஆர்டரில் களமிறங்கினால் அணியின் பேட்டிங் வரிசை பெருமளவில் மாற்றத்தை சந்திக்கும். குறிப்பாக பின் வரிசையில் மற்றொரு பேட்ஸ்மேனை தேர்வு செய்யலாம் என்பதால் இந்த முடிவானது இந்திய அணிக்கு பெரும் சாதகமாகத்தான் அமையும். விராட் கோஹ்லி ஒன்டவுன் ஆர்டரில் களமிறங்கும் பட்சத்தில், நான்காவது இடத்தில் ரஹானேவும் அவருக்கு அடுத்து ரிஷப் பன்ட்டும் களமிறங்குவர். இப்படி நடந்தால் ஆறாவது இடத்தில் அதற்காகவே காத்திருக்கும் ஹனுமா விஹாரிக்கு இடம் கிடைக்கும்.

Rahane-4

கடந்த ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் காயத்திற்கு பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். தற்போது கோஹ்லி எடுத்திருக்கும் இந்த முடிவால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான கே எல் ராகுலும், ஷிகர் தவானும் சொதப்பியதை அடுத்து, ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஓப்பனிங் ஆடிய கோஹ்லி, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

அதனையடுத்து டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ரோஹித்துடன் இணைந்து நான் தான் விளையாடப்போகிறேன் என்று அறிவித்திருக்கும் விராட் கோஹ்லி, தற்போது டெஸ்ட் அணியின் நலனுக்காகவும் தனது பேட்டிங் வரிசையை மாற்றிக் கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement