நியூசிலாந்து அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – விராட் கோலி

Kohli
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் தற்போது பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது இந்த அசத்தலான ஃபார்ம் காரணமாக இந்திய அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றும் நெருக்கத்தில் உள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த விராத் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார்.

சரித்திரத்தை நிகழ்த்த காத்திருக்கும் விராட் கோலி :

இதன் காரணமாக இறுதி போட்டியிலும் விராட் கோலி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு கோப்பையை கைப்பற்றி தருவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. மேலும் விராட் கோலியின் பார்ம் தற்போது உச்சத்தில் உள்ளதால் நிச்சயம் இறுதி போட்டியில் அவர் அசத்துவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மார்ச் 9-ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் விளையாட இருக்கும் விராட் கோலி மாபெரும் சாதனை ஒன்றினை நோக்கி நகர்ந்து வருகிறார் அது குறித்த தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் எப்பொழுதுமே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் வீரர்களுக்கு கோல்டன் பேட் கொடுப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரராக பென் டக்கெட் 227 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து ரச்சின் ரவீந்திரா 226 ரன்களுடனும், ஜோ ரூட் 225 ரன்களுடனும் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். அதனை தொடர்ந்து விராட் கோலி 217 ரன்களுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார். இதில் டக்கெட் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் ஏற்கனவே இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளதால் தற்போது இந்த தொடரின் கோல்டன் பேட் விருதினை வெல்ல ரச்சின் ரவீந்திரா மற்றும் கோலி ஆகியோருக்கு வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ரச்சின் ரவீந்திராவை காட்டிலும் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடக்கூடியவர் என்பதனால் அவர் இந்த தொடரில் கோல்டன் பேட் விருதினை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. தற்போது 10 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கும் விராட் கோலி இறுதி போட்டியில் ஒரு சதத்தையோ அல்லது 50 ரன்களை தாண்டினாலோ அவர் கோல்டன் பேட் வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி பைனல் முடிந்த கையோடு முக்கிய முடிவை கையிலெடுக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் கோல்டன் பேட் வென்ற விராத் கோலி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கோல்டன் பேட் விருதினை வென்றால் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய இரண்டிலும் கோல்டன் பேட் விருது வென்ற முதல் வீரர் என்ற சரித்திர சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement