- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சவாலான ஆஸி மண்ணில் சச்சினின் மெகா சாதனையை உடைத்த கிங் கோலி – உ.கோ வரலாற்றில் உலக சாதனை

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நவம்பர் 2ஆம் தேதியன்று நடைபெற்ற 35வது லீக் போட்டியில் வங்கதேசத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி தோற்கடித்தது. புகழ்பெற்ற அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேஎல் ராகுல் அதிரடியாக 50 (32) ரன்களும் விராட் கோலி 64* (44) ரன்களும் குவித்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 184/6 ரன்கள் சேர்த்தது. அதைத் தொடர்ந்து 185 ரன்களை துரத்திய வங்கதேசத்திற்கு பவர் பிளே ஓவர்களில் இந்திய பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கிய லிட்டன் தாஸ் 21 பந்துகளில் அரைசதம் அடித்து அபார தொடக்கம் கொடுத்தார்.

அதனால் 7 ஓவரில் 66/0 என்ற அதிரடியான தொடக்கத்தை பெற்ற போது மழை வந்ததுடன் வங்கதேசம் 17 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்ததால் இந்திய ரசிகர்கள் கலக்கமடைந்தனர். ஆனால் அதன்பின் மழை கருணை காட்டியதால் 16 ஓவரில் வங்கதேசம் வெற்றி பெற 151 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் மிரட்டிய லிட்டன் தாஸை 60 (27) ரன்களில் கேஎல் ராகுல் ரன் அவுட் செய்து போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார். ஏனெனில் அதன்பின் வந்த கேப்டன் சாகிப் அல் ஹசன் உட்பட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த ஓவர்களில் காலி செய்த இந்தியா கம்பேக் கொடுத்தது.

- Advertisement -

மீண்டும் உலகசாதனை:
ஆனாலும் கடைசி நேரத்தில் நுருள் ஹுசைன் 25* (14) ரன்களும் தஸ்கின் அஹமத் 12* (7) ரன்களும் எடுத்ததால் வெற்றியை நெருங்கிய வங்கதேசத்திற்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பினும் கடைசி ஓவரில் தடுமாறினாலும் போதுமான அளவு அபாரமாக செயல்பட்ட அர்ஷிதீப் சிங் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து இந்தியாவுக்கு த்ரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதனால் 4 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்த இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

இந்த வெற்றிக்கு 4வது ஓவரில் களமிறங்கி கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா 5, தினேஷ் கார்த்திக் 7, அக்சர் பட்டேல் 7 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதும் கடைசி வரை அவுட்டாகாமல் நங்கூரமாகவும் அதிரடியாகவும் நின்று 8 பவுண்டரி 1 சிக்சருடன் 64* (44) ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கடந்த 15 வருடங்களாக இதே போல் ஏராளமான வெற்றிகளை குவித்து வரும் அவர் 2019க்குப்பின் பார்மை இழந்து தவித்தாலும் சமீபத்திய ஆசிய கோப்பையில் சதமடித்து பார்முக்கு திரும்பி இந்த உலக கோப்பையில் சக்கை போடு போட்டு வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அசாத்தியமான வெற்றியை பதிவு செய்த அவர் இந்த உலகக் கோப்பையில் இதுவரை 82*, 62, 12, 64* என 220 ரன்களை குவித்து அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதை விட மொத்தமாக 1062 ரன்கள் குவித்துள்ள அவர் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற மகிளா ஜெயவர்தனே (1012) சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார்.

1. அந்த நிலையில் ஏற்கனவே டி20 உலக கோப்பையில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை (7) வென்ற வீரராக உலக சாதனை படைத்துள்ள அவர் நேற்றைய போட்டியில் வென்ற விருதையும் சேர்த்து 20 ஓவர் மற்றும் 50 ஓவர் என அனைத்து விதமான ஐசிசி உலகக் கோப்பைகளில் 10 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். அதன் வாயிலாக “வெள்ளைப் பந்து ஐசிசி உலகக் கோப்பைகளில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை சமன் செய்த விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதுவரை சச்சின் டெண்டுல்கர் 10 ஆட்டநாயகன் விருதுகளை வென்றது இப்போதும் சாதனையாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க : தப்பை மறைத்து பெனால்டி கொடுக்காம கோலியும், அம்பயரும் ஏமாத்திட்டாங்க – வங்கதேச வீரர் ஆதங்கம், இந்தியர்கள் பதிலடி

2. அதை விட வேகம், பவுன்ஸ் என சவாலான ஆடுகளங்களை கொண்ட ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 3350* (11 சதங்கள்)
2. சச்சின் டெண்டுல்கர் : 3300 (7 சதங்கள்)
3. ரோஹித் சர்மா : 1991

- Advertisement -
Published by