2 வருடங்கள் இடைவெளி.. மெக்கலமின் தனித்துவமான சாதனையை உடைத்த விராட் கோலி.. விவரம் இதோ

Virat Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 12 வருடங்கள் கழித்து விஜய் ஹசாரே கோப்பையில் தனது மாநில அணிக்காக விளையாடினார். டெல்லிக்காக உள்ளூரில் சிறப்பாக விளையாடிய அவர் இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அந்த வாய்ப்பில் ஐசிசி 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது.

அதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி குறுகிய காலத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் நிலையான இடத்தைப் பிடித்தார். அதனால் தம்முடைய மாநில அணியான டெல்லிக்காக அவர் விளையாடுவதை நிறுத்திக் கொண்டார். கடைசியாக 2013 சேலஞ்சர்ஸ் கோப்பையில் டெல்லிக்காக விளையாடிய அவர் அதன் பின் இந்திய அணிக்காக மட்டுமே விளையாடினர்.

- Advertisement -

12 வருட இடைவெளி:

கூடவே 2014இல் தோனி ஓய்வு பெற்ற பின் டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி முழு வீச்சில் இந்தியாவை தலைமைத் தாங்கி நம்பர் ஒன் அணியாக முன்னேற்றினார். அப்படியே 2017 முதல் 3 வகையான இந்திய அணியையும் அவர் தலைமைத் தாங்கியதால் உள்ளூரில் விளையாட நேரம் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.

இருப்பினும் கடந்த வருடம் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற விராட் கோலி இந்த வருடம் டெஸ்ட் போட்டிகளிலும் விடை பெற்றார். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும் அவருக்கு போதுமான நேரம் இருப்பதால் மீண்டும் 2025 விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடுகிறார். அப்படி டெல்லி அணிக்காக விளையாடாத காலங்களில் அவர் இந்திய அணிக்காக 195 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

புதிய சாதனை:

இதன் வாயிலாக 2 லிஸ்ட் ஏ போட்டிகளுக்கு இடையே அதிக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் 2009 முதல் 2015 வரையிலான காலக்கட்டங்களில் ப்ரெண்டன் மெக்கல்லம் 2 லிஸ்ட் ஏ போட்டிகளுக்கு இடையில் நியூசிலாந்துக்காக 96 ஒருநாள் போட்டிகளில் விளையாடியதே முந்தைய சாதனையாகும். அதே பட்டியலில் 2018 – 2025 காலகட்டங்களில் 91 போட்டிகளில் விளையாடிய இந்தியாவின் ரோஹித் சர்மா 3வது இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க: இந்தியா சொதப்பியதாக கம்பீர் சொன்னது சரி என்பதை நிரூபித்த.. தெ.ஆ தொடருக்கான ஐசிசி ரேட்டிங்

அப்படி 12 வருடங்கள் கழித்து விளையாடிய விராட் கோலி ஆந்திரா, குஜராத்துக்கு எதிராக 131, 77 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றியில் பங்காற்றினார். அடுத்ததாக அவர் ஜனவரி 6ஆம் தேதி ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார். அதைத்தொடர்ந்து மீண்டும் இந்திய அணிக்காக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement