லார்ட்ஸ் வெற்றியின் மூலம் டெஸ்ட் கேப்டனாக சரித்திர சாதனை படைத்த விராட் கோலி – விவரம் இதோ

Kohli

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் மழை காரணமாக வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய அணி தனது 2-வது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது மட்டுமின்றி தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

siraj 1

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அந்த சாதனை யாதெனில் இதுவரை இந்திய அணிக்கு 63 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு உள்ள கோலி 37 வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார்.

- Advertisement -

அவரது தலைமையில் இந்திய அணி 15 போட்டிகளில் மட்டுமே தோல்வி பெற்றுள்ளது. இதன்மூலம் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுத் தந்த கேப்டனாக இவர் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் உள்ளார். மொத்தம் 109 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள அவர் 53 வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளார்.

IND 1

அவரைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் 77 போட்டிகளில் 48 வெற்றிகளை பெற்றுக்கொடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ஸ்டீவ் வாக் 57 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி 41 வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார்.

- Advertisement -

red cap 2

அதற்குப் பிறகு தற்போது நான்காவது இடத்தில் 37 வெற்றிகளுடன் விராட் கோலி சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இவரே அதிக வெற்றி சாராசரியுடன் வெற்றிகளை பெற்றுத் தந்த கேப்டனாக இருக்கிறார். இவருக்கு அடுத்து மகேந்திர சிங் தோனி 27 போட்டிகளில் இந்திய அணிக்காக வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement