- Advertisement -
ஐ.பி.எல்

206 ரன்ஸ்.. மிரட்டிய படிடார்.. அசத்திய விராட் கோலி.. சுரேஷ் ரெய்னாவை முந்தி தனித்துவ சாதனை

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 25ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் 41வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலியுடன் சேர்ந்து 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக விளையாட முயற்சித்த கேப்டன் டு பிளேஸிஸ் 25 (12) ரன்களில் நடராஜன் வேகத்தில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த வில் ஜேக்ஸ் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மறுபுறம் அசத்தலாக விளையாடிய விராட் கோலி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

இது போதுமா:
அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரஜத் படிடார் ஹைதராபாத் பவுலர்களை சாரமாரியாக அடித்து நொறுக்கினார். குறிப்பாக மயங் மார்கண்டே வீசிய 11வது ஓவரில் 6, 6, 6, 6 என அடுத்தடுத்த 4 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் வெறும் 20 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 50 ரன்கள் குவித்து அவுட்டானார். அதன் வாயிலாக பெங்களூரு அணிக்காக 2வது அதிவேகமான அரை சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அசத்தலாக விளையாடிய விராட் கோலி அரை சதமடித்து 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 51 (43) ரன்கள் குவித்து அவுட்டானார். இதையும் சேர்த்து இந்த வருட ஐபிஎல் தொடரில் விராட் கோலி 420 ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஒரு சீசனில் 400+ ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 10*
2. சுரேஷ் ரெய்னா : 9
3. டேவிட் வார்னர் : 9

- Advertisement -

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் மகிபால் லோம்ரர் 7, தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் ஸ்வப்னில் சிங் 12 (6) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய கேமரூன் கிரீன் 5 பவுண்டரியுடன் 37* (20) ரன்கள் எடுத்தார். அதனால் 20 ஓவரில் பெங்களூரு 206/7 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் அபாயகரமான வீரர் என்றால் அது அந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் தான் – மேத்யு ஹைடன் வெளிப்படை

ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் நடராஜன் 2, ஜெயதேவ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இருப்பினும் இதே பெங்களூரு அணிக்கு எதிராக இந்த வருடம் ஹைதராபாத் 287 ரன்கள் அடித்து சாதனை படைத்ததை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 250 ரன்கள் கூட அடிக்காததால் ஆர்சிபி ரசிகர்கள் கவலையுடனேயே காணப்படுகின்றனர்.

- Advertisement -