172 ரன்ஸ்.. ஐபிஎல் வரலாற்றில் கிங் கோலி மெகா சாதனை.. அசத்திய அஸ்வின்.. மேக்ஸ்வெல் படுமோசமான சாதனை

RR vs RCB
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 22ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4வது இடங்களை பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் தடுமாறிய கேப்டன் டு பிளேஸிஸ் 17 (14) ரன்களில் ரோவ்மன் போவலின் அற்புதமான கேட்ச்சால் அவுட்டானார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அடுத்த சில ஓவரிலேயே விராட் கோலியும் 33 (24) ரன்களில் சஹால் சுழலில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்ததாக வந்த கேமரூன் கிரீன் – ரஜத் படிடார் அதிரடியாக விளையாட முயற்சித்தனர்.

- Advertisement -

அசத்திய அஸ்வின்:
இருப்பினும் 41 ரன்கள் மட்டுமே பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் கேமரூன் கிரீன் 27 (21) ரன்கள் எடுத்த போது ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் சிக்கினார். அதோடு நிற்காத அஸ்வின் அடுத்ததாக வந்த கிளன் மேக்ஸ்வெலை கோல்டன் டக் அவுட்டாக்கினார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற தினேஷ் கார்த்திக்கின் மோசமான சாதனையை அவர் சமன் செய்தார்.

அந்த இருவருமே தலா 18 முறை ஐபிஎல் தொடரில் டக் அவுட்டாகியுள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்த சில ஓவரில் மறுபுறம் அதிரடி காட்டிய ரஜத் படிடார் 34 (22) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அப்போது வந்த மகிபால் லோம்ரர் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் தடுமாறிய தினேஷ் கார்த்திக் 11 (13) ரன்களில் அவுட்டாகி முக்கிய போட்டியில் சொதப்பினார்.

- Advertisement -

இறுதியில் மகிபால் லோம்ரர் 32 (17) ஸ்வப்னில் சிங் 9* (4) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் பெங்களூரு அணி போராடி 172/8 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 3, ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவரில் வெறும் 19 ரன்கள் மட்டும் கொடுத்து மேக்ஸ்வெல், க்ரீன் ஆகிய 2 முக்கிய ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டுகளை சாய்த்து ராஜஸ்தானுக்கு கை கொடுத்தார்.

இதையும் படிங்க: என் முன்னாள் டீமை இப்படி பாக்குறது வலிக்குது.. மும்பை தோல்விக்கு பாண்டியா காரணமில்லை.. ஹர்பஜன் ஆதங்கம்

இதைத்தொடர்ந்து 173 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் துரத்தி வருகிறது. முன்னதாக இந்த போட்டியில் அடித்த 33 ரன்களையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் 8000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை விராட் கோலி நிகழ்த்தினார். அவரை தவிர்த்து வேறு யாருமே 7000 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பதே விராட் கோலியின் தரத்திற்கு சான்றாக இருக்கிறது.

Advertisement