இந்தியா 196 ரன்ஸ்.. வங்கதேசத்தை வெளுத்த பாண்டியா, துபே, பண்ட்.. விராட் கோலி மாபெரும் உலக சாதனை

IND vs BAN 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய 2வது சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. அப்போட்டி ஜூன் 22ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஆன்ட்டிகுவா நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 3 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்ட கேப்டன் ரோகித் சர்மா 23 (11) ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த ரிசப் பண்ட் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் நங்கூரமாக விளையாடிய விராட் கோலி 3 பவுண்டரி ஒரு சிக்சரை விளாசி 37 (28) ரன்களில் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

அசத்திய இந்தியா:
ஆனால் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 6 (2) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். போதாக்குறைக்கு அடுத்த சில ஓவரில் ரிஷப் பண்ட்டும் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 36 (24) ரன்களில் அவுட்டானதால் 108/4 என இந்தியா தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிதானமாக விளையாடினர்.

அதில் ஆரம்பத்தில் தடுமாறிய சிவம் துபே நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 சிக்சரை பறக்க விட்டு 34 (24) ரன்களில் அவுட்டானார். அவருடன் மறுபுறம் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி 3 சிக்சரை விளாசி அரை சதமடித்து 50 (27) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

அதனால் டி20 உலகக் கோப்பையில் ஆறாவது இடத்தில் களமிறங்கி அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார். இறுதியில் 20 ஓவரில் இந்தியா 196/5 ரன்கள் குவித்தது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ரிஷத் ஹொசைன் 2, தன்சிம் ஹசன் ஷாகிப் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையும் படிங்க: துரத்தும் துரதிஷ்டம்.. 6 வெற்றிகளை பெற்றும் வெளியேறும் நிலையில் தெ.ஆ? காத்திருக்கும் இங்கிலாந்து ட்விஸ்ட்

முன்னதாக இந்தப் போட்டியில் அடித்த 37 ரன்களையும் சேர்த்து 20 ஓவர் மற்றும் 50 ஓவர் ஆகிய 2 உலகக் கோப்பைகளிலும் விராட் கோலி 3000 ரன்கள் கடந்துள்ளார். இதன் வாயிலாக ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றில் 3000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற கௌரவமான உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 3000*
2. ரோஹித் சர்மா : 2637
3. டேவிட் வார்னர் : 2502
4. சச்சின் டெண்டுல்கர் : 2278
5. குமார் சங்கக்காரா : 2193

Advertisement