தியாகியாக மாறிய விராட் கோலி. மொத்த கேரியரிலேயே இதான் 2 ஆவது முறையாம் – விவரம் இதோ

Kohli

இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் இலங்கை அணி பந்து வீசியது. இதனையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களான ராகுல் மற்றும் தவான் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை கொடுத்து அசத்தினார்கள்.

rahul

தவான் 36 பந்துகளில் 52 ரன்களும், ராகுல் 36 பந்துகளில் 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து மூன்றாவது வீரராக விராட் கோலிக்கு பதிலாக இந்திய அணியில் புதிதாக இடம் பிடித்த சஞ்சு சாம்சன் களமிறங்கினார். தான் வந்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தியவர் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவருக்கு பின்னர் மணிஷ் பாண்டே களமிறங்கினார். அவருக்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் ஐந்தாவது வீரராக களமிறங்கினார்.

ஐயரும் தான் சந்தித்த முதல் பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இந்நிலையில் இறுதியாக 6 ஆவது வீரராக விராட் கோலி களமிறங்கினார். வழக்கமாக 3 ஆவது வீரராக களமிறங்கும் கோலி இன்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக அடுத்து அடுத்து அவர்களை இறக்கிவிட்டு தான் 6 ஆவதாக புகுந்து 17 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Pandey

இறுதியில் மனிஷ் பாண்டே மற்றும் தாகூரின் அதிரடியால் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. இந்த போட்டியில் தனக்கு முன்பாக சாம்சன், மணிஷ் பண்டே மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை களமிறக்கி கோலி 6 ஆவது வீரராக களம் இறங்கினார். கோலி 6 ஆவது வீரராக களமிறங்குவது இது இரண்டாவது முறையாகும். இதற்குமுன்னர் அயர்லாந்து அணிக்கு எதிராக 6 ஆவது வீரராக களமிறங்கியுள்ள கோலி அந்த போட்டியின் 2 ஆவது பந்தில் “டக் அவுட்” ஆனது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -