ஆப்கான் டெஸ்ட்டில் விராத் கோலி விலகல்! – காரணம் இதுதான்.

- Advertisement -

ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு தான் ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அந்தஸ்தை பெற்றது.

kohli

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற பின்னர் அந்த அணி விளையாடப்போகும் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ஜூன் மாதம் 14ம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி கேப்டன் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரிலிருந்து தாம் விலகுவதாக தற்போது அறிவித்தூள்ளார்.ஆப்கானிஸ்தான் தொடருக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.

virat1

ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள தொடரில் மொத்தம் 5டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3ஒருநாள் & 3 டி20 போட்டிகளில் இரு அணிகளும் பலப்பரிட்சை செய்யவுள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் முக்கியமானது என்பதால் விராட்கோலி அந்த தொடருக்காக தன்னை தயார்படுத்திக்கொள்ளவே தற்போது இந்த ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக தெரிகின்றது.ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விராட்கோலி விலகுவதால் ரோகித்சர்மா மீண்டும் கேப்டன் பதவியை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement