இன்ஸ்டாகிராமில் பதிவு போடுவதால் கோலிக்கு இத்தனை கோடி சம்பளமா..!

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பவர்களில் விராட் கோலி கோடி கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கிறார் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. கிரிக்கெட்டில் சம்பாதிப்பதை விட விராட் கோலி விளம்பரங்கள் மூலமும், தனது பிரபலத்தை பயன்படுத்தியும் அதிகம் சம்பாதிக்கிறார். ஆனால், அவர் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமும் சம்பாதிக்கிறார் என்ற விடயம் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் உள்ளது.

smartkholi

- Advertisement -

விராட் கோலி அதிக ரசிகர்கள் கொண்ட இந்திய வீரர்களில் ஒரு முக்கியமான நபர். இவரது பிரபலத்தை பறைசாற்றும் வகையில் சமீபத்தில் இவருக்கு டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை கூட அமைக்கப்பட்டது. பொது ரசிகர்களை தாண்டி சமூக வலைத்தளத்திலும் கோலி அதிக ரசிகர்கள் கொண்ட கிரிக்கெட் வீரராக இருந்து வருகிறார்.

சமீப காலமாக கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார், இதுவரை 440 பதிவுகளை பதிவிட்டுள்ளார். அதில் அடிக்கடி தனது அன்றாட நடவடிக்கைகளையும், தனது மனைவியுடன் இருக்கும் பல புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 16.7 மில்லியன் ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள்.

smartvirat

அதெல்லாம் ஒருபுறம் இருக்க, கோலி பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் சுமார் 3 கோடி வரை லாபம் ஈட்டுகிறார் என்று சமீபத்தில் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி கோலி இதுவரை தான் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் சுமார் 140 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், 2017 ஆம் தொடக்கத்தில் கோலி, உலகளவில் அதிக வருமானம் பெரும் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார் என்பது குறிப்பித்தக்கது.

Advertisement