கொரோனா நிதியுதவி : விருஷ்கா தம்பதி கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா ? – உண்மையிலே சூப்பர் ஜோடிதான் நீங்க

anushka
- Advertisement -

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்த அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து பல கோடிகள் இதுவரை நிவாரண நிதியாக இந்திய அரசாங்கம் செலவழித்து வருவதால் தற்போது நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை களைய ஒவ்வொரு மாநில அரசும் மக்களிடம் தானாக முன்வந்து நிதி உதவி வழங்கலாம் என்று கோரிக்கை வைத்தது.

Anushka

மேலும் பிரதம மந்திரி மோடி அவர்களின் நிவாரண வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில்துறை உரிமையாளர்கள் மற்றும் திரைநட்சத்திரங்கள் என அனைவரும் தங்களது நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் ஆன பிசிசிஐ சார்பில் 51 கோடி ரூபாய் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா 52 லட்சம் (முதல்வர் நிவாரண நிதி 21, பிரதமர் நிவாரண நிதி 31) அளித்து பிரதமர் மற்றும் ரசிகர்களின் பாராட்டினை பெற்றார்.

மேலும் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம், கங்குலி 50 லட்சம், கம்பீர் 50 லட்சம் என அவர் அவர்கள் தங்களது அளவிற்கு ஏற்ப பணத்தினை நிதி உதவி அளித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரஹானே 10 லட்ச ரூபாய் வழங்கினார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா தம்பதி தங்களது நிதியுதவியினை அளித்துள்ளனர்.

- Advertisement -

அவ்வாறு மஹாராஷ்டிரா முதல் மந்திரி மற்றும் பிரதமமந்திரி ஆகியோரது நிவாரண நிதியாக கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் அளித்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். மேலும் கிரிக்கெட் வீரர்கள் சிலர் லட்சக்கணக்கில் நிவாரணநிதி வழங்கிய நிலையில் விருஷ்கா தம்பதி கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கி அனைவரையும் ஆச்சரிய படுத்தியுள்ளார்கள்.

viratanushka

மேலும் இந்திய அளவில் மிகவும் பிரபலமான இந்த தம்பதி செய்த இந்த உதவினை ரசிகர்கள் வரவேற்றது மட்டுமின்றி அவர்களை வாழ்த்தி இந்த பதிவினை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement