பிரபல கிரிக்கெட் வீரர் மனைவிக்கு பாலியல் தொல்லை..! யார் தெரியுமா..! – புகைப்படம் உள்ளே

dravid

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வினோத் காம்லி இதுவரை இந்திய அணியில் 17 டெஸ்ட் மற்றும் 104 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும்,இவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பராவர் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் இவரது மனைவியிடம், முதியவர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வினோத் காம்லிக்கு, ஆண்ட்ரியா என்ற மனைவி உள்ளார்.சமீபத்தில் வினோத் காம்லியும் அவரது மனைவியும் மும்பையில் உள்ள ஒரு பிரபல மாலிற்கு சென்றுள்ளனர். அப்போது முதியவர் ஒருவர் ஆண்ட்ரியாவிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆண்ட்ரியா அந்த முதியவரை அரைந்துள்ளார்.

இருவருக்கும் தகராறு முற்றிப்போக சிறிது நேரம் கழித்து அந்த முதியவரின் மகன் அன்கூர் திவாரி என்பவர் வந்துள்ளார். இவர் பிரபல இந்தி இசையமைப்பாளர் அங்கீத் திவாரியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் தனது தந்தையை தாக்கியதற்கு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தனது தந்தையை தாக்கிய வினோத் கம்பிளியின் மனைவி ஆண்ட்ரியா மீது காவல் துறையில் புகார் அளித்தார்.
vinoth
அன்கூர் திவாரி அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினரிடம் விசாரனை இருவரையும் காவல் துறையினர் விசாரித்து வருகிறது . பிரபல இசையமைப்பாளர் குடும்பத்திற்கும் , இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரின் மனைவிக்கும் ஏற்பட்ட இந்த பிரச்சனை கிரிக்கெட் மற்றும் சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.