ரஞ்சி கோப்பையில் வரலாறு படைத்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் – விவரம் இதோ

Vinay
- Advertisement -

இந்திய அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் இந்திய அணிக்காக சில போட்டிகளில் விளையாடி இருந்தாலும் கடந்த 2004ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்துக்கு அறிமுகமாகி இதுவரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக கர்நாடக அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது புதுச்சேரி அணிக்காக ஆடி வரும் வினய் குமார் ரஞ்சி கோப்பையில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார்.

Vinay 1

- Advertisement -

மேலும் இந்த சாதனை குறித்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதன்படி கொல்கத்தாவில் நடைபெற்ற மிசோரம் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ரஞ்சி கோப்பை இதுவரை 412 ரன்களை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ரஞ்சி வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன்னதாக ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங் என்பவர் 409 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனையை தன்வசம் வைத்திருந்தார். அதனை தற்போது சுமார் 133 முதல் தரப் போட்டிகளில் விளையாடி அந்த சாதனையை தகர்த்துள்ளார் வினய் குமார் மேலும் மொத்தமாக முதல்தரப்போட்டி மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டையும் சேர்த்து இவர் 474 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

vinay 2

வினய் குமார் கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் 2013ஆம் ஆண்டு இவர் இந்திய அணிக்காக கடைசியாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக இவர் ஒரு டெஸ்ட், 31 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement