இவ்வளவு ரன்கள் அடிச்சாலே போதும். இந்திய ஜெயிக்க அதுவே போதும் – பேட்டிங் கோச் அதிரடி பேட்டி

Rathour
- Advertisement -

ஐசிசி நடத்தும் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டமானது மழையின் காரணமாக டாஸ்கூட போடாத நிலையில் மொத்தமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் டாஸ் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். முதல் நாள் பெய்த மழையின் காரணமாக இரண்டாவது நாளில் மைதானமானது வேகப் பந்து வீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

wtc ind

- Advertisement -

ஆனால் நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சை இந்திய அணியின் ஓப்பனர்களான சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் திறமையாக எதிர் கொண்டு வலுவான தொடக்கத்தை கொடுத்திருந்தாலும், அடுத்த வந்த புஜாரா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மூன்று விக்கெட்டுகள் இழந்த பின்னர், மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்ட இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லியும், துணைக் கேப்டனுமான ரஹானேவும் அற்புதமாக விளையடி நாட் அவுட் பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர்.

மைதானமானது பவுலிங்கிற்கு சாதகமாக அமைந்த போதும் நன்றாக விளையாடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர். நேற்றைய நாள் ஆட்டம் முடிந்ததும் மீடியாக்களுக்கு பேட்டியளித்திருக்கும் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர், இது போன்ற ஆடுகளங்களில் 250 ரன்கள் அடித்தாலே போதும் என்று கூறியிருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது;

gill

நாங்கள் அனைத்து செஷன்களிலும் நன்றாகவே பேட்டிங் ஆடினோம். இந்த மைதானத்தின் சூழ்நிலையைப் பொறுத்தவரை 250 ரன்கள் அல்லது அதற்கு மேல் கொஞ்சம் ரன்கள் அடித்தாலே போதுமானதாக இருக்கும். பந்து பழையதாக மாறிய பின்னரும் நன்றாக ஸ்விங் ஆகிறது. இந்த ஆட்டம் முழுவதும் இப்படித்தான் செல்லப் போகிறது என்று கூறிய அவர், இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான சுப்மன் கில்லின் பேட்டிங் யுக்தியை பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் ஓப்பனீங் ஆடிய கில், ஸ்விங் ஆகும் பந்துகளை இறங்கி வந்து திறமையாக எதிர் கொண்டார். இதனைக் குறிப்பிட்டு பேசிய அவர், சுப்மன் கில்லின் இதுபோன்ற யுக்தியைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனால் நிறைய ரன்களை அவரால் சேர்க்க முடியும். நாங்கள் நிறைய ரன்களை அடிக்க வேண்டும் என்று என்று இதற்கு முன்னரே ஒரு குழுவாக கலந்து பேசி இருந்தோம். அவரும் அதற்கு ஏற்றார்போலவே விளையாடியது சிறப்பான ஒன்றாக இருக்கிறது என்று அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

kohli rahane

போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாவது நாள் ஆட்டத்தை விரைவிலேயே முடித்துக் கொள்வதாக நடுவர்கள் அறிவித்ததால், நேற்றைய நாளில் 64.4 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 146 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோஹ்லி 44 ரன்களுடன், ரஹானே 29 ரன்களுடன் ஆட்மிழக்காமல் இருக்கின்றனர்.

Advertisement